Author: Jesus - My Great Master

இயேசுவின் இதயத்தை பெற்றிருப்போம்

நாம் பேருந்திற்காக காத்திருக்கிறபோது, நாம் இரயிலில் பயணம் செய்கிறபோது பிச்சைக்காரர்கள் நம்மிடத்தில் பிச்சை கேட்டு வருகிறபோது, ”இவர்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா?” என்று நமக்குள்ளாக கடிந்திருப்போம். ”உழைத்து சம்பாதிக்க வேண்டியதுதானே?” என்று அறிவுரை கூறியிருப்போம். இல்லையென்றால் பாராமுகமாய் இருந்திருப்போம். நாம் மட்டுமல்ல, அனைவருமே இப்படித்தான் பிச்சைக்காரர்களைப் பார்ப்போம். ஆனால், நம்மிடம் உதவி கேட்டு வரும் அனைவரையுமே, இயேசுவாக பார்க்க வேண்டும் என்று நற்செய்தி அழைப்புவிடுக்கிறது. இயேசுவை நாம் பார்த்ததில்லை. அவருடைய தோற்றத்தை நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால், உதவி கேட்டு இயலாமையில் வரும் அனைவருமே, இயேசுவின் சாயலில் உள்ளவர்கள் என்பதை, இயேசுவின் வார்த்தைகள் நமக்கு தெளிவாக்குகிறது. இந்த நற்செய்தி இரண்டு எளிய சிந்தனைகளை நமது மனதில் பதிக்கிறது. 1. நாம் இயேசுவின் மனநிலையில் பார்க்க வேண்டும். 2. நாம் இயேசுவை அவரில் பார்க்க வேண்டும். இந்த இரண்டு மனப்பாங்கும் நம்மிடம் இருக்கிறபோது, நிச்சயம் நம்மால் மற்றவர்களை அன்பு செய்ய முடியும். மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்....

FINDING ELUSIVE CHURCH UNITY

“I for My part declare to you, you are ‘Rock,’ and on this rock I will build My Church, and the jaws of death shall not prevail against it. I will entrust to you the keys of the kingdom of heaven.” –Matthew 16:18-19 Mass Readings: February 22 First: 1 Peter 5:1-4; Resp: Psalm 23:1-6; Gospel: Matthew 16:13-19 Because the Church, the body of Christ, is not united, it has not been successful in upholding the permanence of marriage for millions of married couples in the Western world. Moreover, the Church, in her disunity and consequent weakness, has seemed powerless to...

நற்செய்தி அறிவிக்கிற சீடர்களாக வாழ……

பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு தான் வாக்களித்த தேசத்தைத் தருகிறார். வாக்களிக்கப்பட்ட மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், விரைவில் அவர்கள் தங்கள் கடவுளை மறந்துவிட்டு, கடவுளை விட்டு விலகிச்செல்கிறார்கள். அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கிறார்கள். அடிமைகளாக மாறுகிறார்கள். இந்த நேரத்தில் தங்களின் இந்த நிலைமைக்கு காரணம் தங்களுடைய பாவம் தான் என்பதை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டுகிறார்கள். கடவுளும் அவர்களை மீட்பதற்கு மெசியாவை அனுப்புவதாக வாக்குறுதி தருகிறார். எனவே, இஸ்ரயேல் மக்கள் வாக்களிப்பட்ட மெசியாவிற்காக காத்திருக்கிறார்கள். இந்தப்பிண்ணனியில் தான் பேதுரு இயேசுவை “மெசியா” என்று சொல்கிறார். இயேசு கிறிஸ்து பேதுரு தன்னைப்பற்றி “தான் மெசியா, உலகிற்கு வரவிருந்தவர்” என்று கூறியதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதேவேளையில் தான் மெசியா என்பதை எவருக்கும் சொல்ல வேண்டாம் என்பதைக் கண்டிப்பாகக்கூறுகிறார். எதற்காக இயேசு தான் மெசியா என்பதை மற்றவர்கள் அறிவதைத்தவிர்க்க வேண்டும்? இயேசுவுடனான நம்முடைய உறவு தனிப்பட்ட உறவு. மற்றவர்கள்...

“HOPE IN HIM” (Sir 2:6)

“Study the generations long past and understand; has anyone hoped in the Lord and been disappointed?” –Sirach 2:10 Mass Readings: February 21 First: Genesis 15:5-12,17-18;Resp: Psalm 27:1,7-9,13-14;Second: Philippians 3:17–4:1;Gospel: Luke 9:28-36 Joseph was sold into slavery by his brothers and then imprisoned, losing at least ten of the best years of his life (Gn 37:1ff). Yet he never wavered in his hope, and God restored him far beyond what he could have imagined. Abraham, Joshua, Caleb, and Ruth also suffered for years in “the generations long past…[They] hoped in the Lord” and were not disappointed (Sir 2:10). “Hope is the...

ஆண்டவரையே நம்பியிரு. அவரே உன் சார்பில் செயலாற்றுவார்

ஆண்டவரை நம்பியிக்க திருப்பாடல் (திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40) ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார். ”நம்புதல்” என்கிற வார்த்தையின் பொருள் என்ன? நம்பிக்கை என்பது கடவுள் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்வது கிடையாது. இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என இரண்டு வகைகளாக மனிதர்களைப் பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யார்? கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள். அவர்கள் கடவுளைப் பார்த்தது கிடையாது. ஆனால், அது ஒருவிதமான நம்பிக்கை. கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் யார்? கடவுள் இருக்கிறார் என்பதை நம்பாதவர்கள். இவர்கள் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருக்கலாம். இங்கு நம்பிக்கை என்று சொல்லப்படுவது, கண்ணால் காண முடியாத கடவுள் ஒருவர் இருக்கிறார் என்கிற வெறுமனே நம்பிக்கை மட்டும் அல்ல, மாறாக, இந்த இறைவன் என்னை அன்பு செய்கிறார் என்கிற உறுதிப்பாடு. அவர் என்னை வழிநடத்துகிறார் என்கிற...