Author: Jesus - My Great Master

விசுவாசத்தில் வளர, வளர்த்தெடுக்க…

அறிவியல் வளர்நதிருக்கிற இந்த நவீன யுகத்தில், புதுமைகளை நம்புவது நவீன தலைமுறையால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அப்படியே ஏதாவது நடந்தாலும், அதையும் எப்படியாவது, அறிவியல் கொண்டு விளக்குவதற்கு இந்த தலைமுறை முயற்சி செய்கிறது. உயிர்ப்பையும் தொடக்க காலத்தில் இப்படி பலகட்டங்களாக விமர்சித்தவர்கள் உண்டு. இயேசு உண்மையிலே உயிர்த்தாரா? உயிர்ப்பை நம்ப முடியுமா? அது சாத்தியமா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கெல்லாம், விளக்கத்தைத் தருவதுதான் இன்றைய நற்செய்திப்பகுதி. இன்றைய நற்செய்திப்பகுதி, இயேசு உண்மையிலே உயிர்த்தார் என்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது. தொடக்க காலத்தில் ஆங்காங்கே உயிர்த்த இயேசுவை சீடர்கள் பார்த்ததாகக் கூறியதைப் பலவற்றுக்கு ஒப்பிட்டனர். சீடர்கள் ஏதாவது கனவு கண்டிருக்கலாம் அல்லது ஒருவிதமான பிரம்மையில் அவர்கள் இரு்ந்திருக்கலாம் அல்லது இயேசுவோடு நெருங்கி இருந்ததால், அவர்கள் பார்ப்பது எல்லாம் இயேசுவைப்போல இருக்கிறது என்று பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இவையெல்லாம் தவறான விளக்கங்கள், உண்மையில் இயேசு உடலோடு உயிர்த்தார் என்பதற்குத்தான் இன்றைய நிகழ்ச்சி, யோவான்...

CATALYTIC CONVERTER

Jesus said: ” ‘Everything written about Me in the law of Moses and the prophets and psalms had to be fulfilled.’ Then He opened their minds to the understanding of the Scriptures.” –Luke 24:44-45 Mass Readings: April 20 First: Acts 3:11-26; Resp: Psalm 8:2,5-9; Gospel: Luke 24:35-48 We recognize the risen Christ when: Jesus opens our “minds to the understanding of the Scriptures,” Jesus breaks bread with us (Lk 24:35), that is, gives Himself to us in Holy Communion, we receive the Holy Spirit in a new Pentecost, and we witness for Jesus (see Acts 1:8; Lk 24:48). The beginning...

உயிர்த்த இயேசுவின் சாட்சியமாய் மாறுவோம்

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்விற்கு பல சான்றுகள் இருந்தாலும், இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் தான் மிகப்பெரிய சாட்சிகள். இயேசு அவர்களோடு இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கைக்கும், உயிர்த்த இயேசுவைக்கண்டபிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்விற்கும் இடையேயான வேறுபாடு மிகப்பெரியது. இயேசுவோடு வாழ்ந்தபோது, தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக்கொண்டனர். கடலில் பயணம் செய்தபோது, சீறிஎழுகிற அலைகளைப்பார்த்து, கூச்சல்போட்டு மரணபயத்தில் கத்தினர். தீய ஆவிகளை ஓட்டுவதற்கு இயேசுவால் வல்லமை கொடுக்கப்பட்டிருந்தும், விசுவாசமின்மையினால் அந்த ஆற்றலைப்பயன்படுத்த திறனற்றிருந்தனர். இயேசுவுக்கு ஆபத்து என்று வந்தபோது, அவரைவிட்டுவிட்டு ஓடினர். இயேசு இறந்தபிறகு அறைகளில் தங்கள் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள பதுங்கியிருந்தனர். இந்த அளவுக்கு பயந்த, கோழைத்தனமான வாழ்வு வாழ்ந்த சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வந்தது என்றால், அதற்கு காரணம் இயேசுவின் உயிர்ப்புதான் என்பதை ஆணித்தரமாக நம்மால் கூறமுடியும். இன்றைய நற்செய்தியில் சீடர்களின் வாழ்வு மாற்றம் பெறக்காரணமான உயிர்த்த இயேசுவின் காட்சியை நாம் பார்க்கிறோம். இந்த உயிர்ப்பு அனுபவம் தான் சீடர்களின் வாழ்வில்...

THE RISEN JESUS AND THE POPE

“The Lord has been raised! It is true! He has appeared to Simon [Peter].” –Luke 24:34 Mass Readings: April 19 First: Acts 3:1-10; Resp: Psalm 105:1-4,6-9; Gospel: Luke 24:13-35 The Holy Spirit inspired the authors of Scripture to testify that the risen Jesus appeared especially to St. Peter (also known in the New Testament as Simon, Simon Peter, Cephas, and Kephas) before appearing to the entire group of apostles. St. Paul also makes a special reference “that He was seen by Cephas, then by the Twelve” (1 Cor 15:5). These, and other references, give evidence to the primacy of Peter....

இயேசுவின் உயிர்ப்பு கவலையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு மனக் கவலையை, கலக்கத்தை அகற்றும் அருமருந்து என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் இனிமையுடன் விளக்குகிறது. எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்கள் இருவரும் மிகுந்த கவலையுடன் நடந்துசெல்கின்றனர். “அவர்கள் முகவாட்டத்துடன் நின்றனர்” என்று லூக்கா நற்செய்தியாளர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். நாசரேத் இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகின்றார் என்று அனைவரும், குறிப்பாக இந்தச் சீடர்கள், எதிர்பார்த்திருந்தனர். ஆனால், “தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரண தண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்” எனத் தங்களின் கவலை, கலக்கம், ஏமாற்றம், விரக்தி… அனைத்தையும் இயேசுவிடமே பகிர்ந்துகொண்டு நடக்கின்றனர். இயேசுவோ மறைநூலை அவர்களுக்கு விளக்குகின்றார், அப்பத்தை பிட்டுக்கொடுக்கின்றார். அவர்களது கண்கள் திறக்கப்பட, அவர்கள் உயிர்த்த இயேசுவைக் கண்டுகொள்கின்றனர். உடனே அவர்களின் கவலை, கலக்கம், குழப்பம் … அனைத்தும் மறைகின்றன. அந்நேரமே அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்து, தங்களது அனுபவத்தை அனைத்துச் சீடர்களுடனும் பகிர்ந்துகொள்கின்றனர். உயிர்;த்த இயேசு நம் கவலைகளைக் களைந்து, நம் பாதையைத் திருப்பி விடுகிறார்....