Author: Jesus - My Great Master

என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது

விசுவாச வாழ்விற்கும், உலக வாழ்விற்கும் இடையேயான போராட்டத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுவதுதான் இன்றைய திருப்பாடல்(திருப்பாடல் 42: 1 – 2, 43: 3, 4). இந்த உலக வாழ்க்கையின் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்தி, பயம் விசுவாச வாழ்விற்கான சவாலாக தென்படுகிறது. ஆனால், இவையனைத்தையும், விசுவாசம் என்கிற ஆன்மீக ஆற்றல் ஒன்றுமில்லாததாக மாற்றிவிடுகிறது. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலையும், அதனை பொருட்படுத்தாமல் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது எப்போது நமக்கு ஈடுபாடு, ஆர்வம், தாகம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் விசுவாசம் நமக்குள்ளாக தோன்ற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வரக்கூடிய எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கு இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது நமக்கு ஈடுபாடே இந்த பிரச்சனைகளோடு தான், தோன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனைகளின் தொடக்கத்தில், எதையும் நம்மால், தனி ஆளாக எதிர்கொள்ள முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய பலத்தில் நாம்...

WALKING THROUGH A MINED-FIELD

“The Lord is my Shepherd; I shall not want.” –Psalm 23:1 Mass Readings: May 7 First: Acts 2:14,36-41; Resp: Psalm 23:1-6; Second: 1 Peter 2:20-25;Gospel: John 10:1-10 Listen to the Mass Readings Few of us have ever pastured, fleeced, or slaughtered a sheep. So we don’t have the experience to understand the image of the Good Shepherd. Nevertheless, many people are fascinated with this image. Perhaps they instinctively know the deep and compelling need of the human person to be shepherded. One of the main works of a shepherd is to guide the sheep. If we are on the road...

நல்ல ஆயன் இயேசு

பழைய ஏற்பாட்டில் கடவுள் ஓர் ஆயனாக சித்தரிக்கப்படுகிறார். திருப்பாடல் 23: 1 சொல்கிறது: “ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை”. திருப்பாடல் 77: 20 “மோசே, ஆரோன் ஆகியோரைக்கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச்செல்கின்றீர்” ஆண்டவரால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியாவும் ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார். இறைவாக்கினர் எசாயா 40: 11 ல் பார்க்கிறோம்: “ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்”. பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கின்ற இந்த உவமை புதிய ஏற்பாட்டிலும் தொடர்வதை இன்றை நற்செய்தி எடுத்தியம்புகிறது. பாலஸ்தீனத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு மற்ற நாடுகளில் வாழ்ந்த இடையர்களை விட சற்று வித்தியாசமானதாக இருந்தது. அவர்கள் தங்களோடு தோல்ப்பையை கொண்டு சென்றனர். அதில் உணவுக்காக காய்ந்த ரொட்டிகளும் உலர்ந்த பழங்களும் வைத்திருந்தார்கள். பாதுகாப்புக்காக கவண் ஒன்றையும் வைத்திருந்தார்கள். எதிரி விலங்குகளிடமிருந்து மந்தையைக் காப்பாற்றவும்,...

MAKE A RUN FOR IT

“There he found a man named Aeneas, a paralytic who had been bedridden for eight years. Peter said to him, ‘Aeneas, Jesus Christ cures you! Get up and make your bed.’ The man got up at once.” –Acts 9:33-34 Mass Readings: May 6 First: Acts 9:31-42; Resp: Psalm 116:12-17;Gospel: John 6:60-69 Listen to the Mass Readings The first healing by the newborn Church recorded in Acts of the Apostles was the healing of the man born lame (Acts 3:1ff). Later, Peter healed “Aeneas, a paralytic who had been bedridden for eight years” (Acts 9:33). Paul also healed a man lame...

நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா!

இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று இயேசு நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொள்வோம். இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். அவர்களை நோக்கி இயேசு கேட்கிறார்: “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” நாமோ ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோமாக!” நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு வாழ உறுதி பூணுவோம். மன்றாடுவோம்: நிறைவின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உலக இன்பங்கள், செல்வம், பல்வேறு விதமான சோதனைகள் இவற்றின் மத்தியிலும், நான் உம்மை விட்டுப் பிரிந்துவிடாத அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே...