சிலுவையிலே தான் மீட்பு உண்டு
இயேசுவைப் பொறுத்தவரையில் அவருக்கு வாழ்வின் உச்சகட்டம் சிலுவை. சிலுவையில் தான் மீட்பு, சிலுவை தான் முடிவில்லாத வாழ்வைப்பெற்றுத்தரப்போகிறது என்பதை அவர் முழுமையாக நம்பினார். யோவான் 12: 23 ல் வாசிக்கிற, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிற இறைவார்த்தை இதை வலியுறுத்துவதாக அமைகிறது. சிலுவைக்கும், மீட்புக்கும் உள்ள தொடர்பைப்பற்றி இயேசு தொடர்ச்சியாக பல இடங்களில் பேச வேண்டிய அவசியம் என்ன? அதனுடைய அர்த்தம் என்ன? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், வரலாற்றிலே இடம் பிடித்திருக்கிற சரித்திர நாயகர்களுக்கு இறப்புதான் இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. சரித்திரத்தில் இடம்பெற்ற மனிதர்களில் பலர் உயிர் வாழ்ந்தபோது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. புகழ் பெறவும் இல்லை. ஆனால், அவர்கள் தழுவிய மரணம் தான் அவர்களின் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச்செய்து, அவர்களுக்கு வரலாற்றில் தனி இடத்தைப்பெற்று தந்திருக்கிறது. இயேசு இறந்தபோது கூட நூற்றுவர் தலைவன் ஒருவர் ‘உண்மையிலே இவர் இறைமகன் தான்’ என்று சொன்னதும் இதை...