Author: Jesus - My Great Master

மனித எண்ணம்

இன்றைய நற்செய்தியில் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27) சதுசேயர்கள் சொல்வது இணைச்சட்டம் 25: 5 – 10 முதல் காணப்படக்கூடிய பகுதியாகும். இந்த சட்டத்திற்கான நோக்கம் இரண்டு: முதலாவதாக, வம்சம் தொடர வேண்டும். இரண்டாவதாக, சொத்துக்கள் வம்சத்தோடு இருக்க வேண்டும். அது கையைவிட்டு போகக்கூடாது என்பதுதான். இந்த அடிப்படையில்தான், இந்த சட்டம் இயற்றப்பட்டது. உயிர்ப்பு என்பதை, சதுசேயர்கள் நம்பாததால், அதை ஒரு கேலிப்பொருளாக, இயேசுவிடம் அவர்கள் பரிகசிக்கிறார்கள். ஆனால், இயேசு இந்த வாய்ப்பைப்பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு உயிர்ப்பு பற்றிய சரியான புரிதலை கொடுக்கிறார். உயிர்ப்பு என்பதை நமது இந்த உலக வாழ்வோடோ அல்லது நமது மனித எண்ணத்தின்படியோ நாம் சிந்திக்கக்கூடாது, என்பது இயேசு தரும் முதல் விளக்கம். நாம் அனைவருமே வானதூதர்களைப்போல இருப்போம். கத்தோலிக்கத் திருச்சபையால், ஏவப்பட்ட நூல் என்று கருதப்படாத, ஏற்றுக்கொள்ளப்படாத புத்தகத்தில், நேர்மையாளர்கள், வானதூதர்கள் போல கருதப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. யூதப்போதகர்களின் விளக்கநூலில், உயிர்ப்பு என்பது கடவுளின்...

“Whose likeness…is this?” –Mark 12:16, RSV-CE

We are like coins. The image of God was stamped on us at Baptism. We were sealed with the Holy Spirit at Confirmation. The image and seal proves to the world that God owns us. Mass Readings: June 6 First: Tobit 2:9-14; Resp: Psalm 112:1-2,7-9;Gospel: Mark 12:13-17 Listen to the Mass Readings Like cattle branded with the mark of their owner, people who saw the Roman coin could tell whose image was on it, and to whom it ultimately belonged. The Roman coin was stamped with Caesar’s image. Therefore, Jesus said it ultimately belonged to Caesar and should be given...

சிக்க வைக்கும் புகழ்ச்சி!

பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர். ஆள் பார்த்து செயல்படாதவர். எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லி, வரி செலுத்துவது முறையா, இல்லையா என்று கேட்டனர். இந்த நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் எளிய பாடங்கள்: 1. புகழ்ச்சியிலும் சிக்கல் இருக்கிறது. பாராட்டுவதற்குப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள், சிக்க வைப்பதற்காகப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள். 2. போலியான புகழ்ச்சியில் மயங்கிவிடக்கூடாது. இயேசு பொய்யான புகழ்ச்சியைப் புரிந்துகொண்டார். “அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு” என்று எழுதியுள்ளார் மாற்கு. எனவேதான், “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். 3. உள்நோக்கமின்றிப் பிறரைப் புகழவேண்டும். நமது பாராட்டுகள் நேர்மையானதாக அமையட்டும். மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் பாராட்டுரைகள் உறவை வளர்ககும் வகையில் அமைய அருள்தாரும், ஆமென். ~ அருள்பணி. குமார்ராஜா

FRUIT AND NUTS

“He still had One to send – the Son Whom He loved. He sent Him to them as a last resort, thinking, ‘They will have to respect My Son.’ ” –Mark 12:6 Mass Readings: June 5 First: Tobit 1:3; 2:1-8; Resp: Psalm 112:1-6;Gospel: Mark 12:1-12 Listen to the Mass Readings God, the Good Master, digs out a vat for tenants who will soon mock His messengers and murder His Son (Mk 12:1-8). The tenant farmers were entrusted to run the vineyard for the Master in His absence. They have been given much, and therefore much will be required of them...

கடவுளின் நீதி

வாழ்க்கையில் நமது நினைப்பின்படி நிகழ்வுகள் நடக்கிறபோது, நமக்குள்ளாக கர்வம் குடிகொள்ள ஆரம்பித்துவிடுகிறது. அதன் விளைவாக, ஆணவமும், தலைக்கனமும் சேர்ந்து, கடவுளுக்கு நிகர் நான், என்கிற மனநிலை நமக்குள் குடிகொள்ள ஆரம்பித்து விடுகிறது. அந்த நினைப்பு வருகிறபோது, நாம் அழிய ஆரம்பித்து விடுகிறோம். இன்றைய வாழ்வில் பெரும்பாலான பணமுதலைகளின் வாழ்வு, இப்படிப்பட்ட வாழ்வாகத்தான் இருக்கிறது என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. தோட்டத்தொழிலாளர்கள் அந்த தோட்டத்தின் பலனை ருசிகண்டு விட்டார்கள். “ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா?” என்கிற சொல்லாடலுக்கு ஏற்ப, அனைத்துமே தாங்கள் நினைத்தது போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இனியும் தாங்கள் நினைப்பது போலத்தான் நடக்கும், என்ற ஆணவமும், தலைக்கனமும் அந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இதுதான் அழிவின் தொடக்கம். கடவுள் நாம் தவறு செய்கிறபோது, நம்மை தண்டிப்பதற்கு காலம் தாழ்த்துகிறார் என்றால், அது அவருடைய இரக்கத்தின் உன்னத்தை, ஆழத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அதனை நாம் நமக்கு சாதகமாகப்...