Author: Jesus - My Great Master

வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாலம் அனுபவித்திருந்த செக்கரியா, தனது மகனைப்பற்றிய நீண்டதொரு கனவை வைத்திருந்தார். கடவுள் பக்தியுள்ள ஒவ்வொரு பாரம்பரிய யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வந்து, அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். மெசியாவின் வருகைக்கு முன்னால், அவருடைய முன்னோடி வந்து, அவருக்கான வழியை ஆயத்தம் செய்வார் என்றும் உறுதியாக நம்பினர். செக்கரியா தனது மகனை மெசியாவின் முன்னோடியாக கனவு கண்டார். தான் அனுபவித்த நிகழ்ச்சிகள், கண்ட காட்சிகள் வழியாக, திருமுழுக்கு யோவான் தான், மெசியாவின் முன்னோடி என்பதை, அவர் ஆணித்தரமாக நம்பினார். நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே ஏதோ ஒரு செய்தியை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. தெளிவான பார்வையுடன், நமது அனுபவத்தையும் அத்தோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் அதை தெளிவாக உணர முடியும். அத்தகைய தெளிவைத்தான், செக்கரியா தனது வாழ்க்கையில் கண்டார். கடவுளின் செய்தியை நாம் அறிந்து கொள்ள,...

THE HEALER OF THE BROKEN-HEARTED (see Ps 34:19)

“We have come to know and to believe in the love God has for us.” –1 John 4:16 Mass Readings: June 23 First: Deuteronomy 7:6-11; Resp: Psalm 103:1-4,6-7,8,10;Second: 1 John 4:7-16; Gospel: Matthew 11:25-30 Listen to the Mass Readings On the day before the feast of the Sacred Heart, I visited a man in a hospital who was close to death. The doctors had called the family to the bedside of the dying man. At that point, the man rallied slightly and did not die. When I was talking to his wife, she said: “Father, I hope he dies tomorrow...

இன்று தேவையான உணவை எங்களுக்குத்தாரும்

இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம், யூதர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டும். உணவு என்பது வானக உணவைக்குறிப்பதாக நாம் அர்த்தம் கொள்ளலாம். ஏனெனில் லூக்கா 14: 15 ல் நாம் பார்க்கிறோம்: ”இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறையாட்சி பற்றி யூதர்களுக் விநோதமான ஒரு கருத்து இருந்தது. மெசியாவின் ஆட்சி வருகிறபோது, மெசியாவின் விருந்து நடைபெறும். அந்த விருந்தில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற அனைவரும் கலந்து கொள்வர். அத்தகைய விருந்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பமாக, இது பார்க்கப்படுகிறது. கடவுள் நமது உடலை பேணி வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை இது நமக்கு தெளிவாக்குகிறது. ஏனென்றால், மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்க மணிக்கணக்காக தங்கியிருந்தபோது, அவர்களுக்கான உணவைப்பற்றி இயேசு கவலைப்படுவதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம். உணவால் நாம் மடிந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கிருந்த மக்களுக்கு உணவு கொடுக்கிறார். மக்கள் ஆரோக்யமான வாழ்வு வாழ்வதற்கு, ஆரோக்யமான உணவும் தேவை...

A FALLEN AWAY JUMP SHOT

“My fear is that, just as the serpent seduced Eve by his cunning, your thoughts may be corrupted and you may fall away from your sincere and complete devotion to Christ.” –2 Corinthians 11:3 Mass Readings: June 22 First: 2 Corinthians 11:1-11;Resp: Psalm 111:1-4,7-8;Gospel: Matthew 6:7-15 Listen to the Mass Readings Most American Catholics who have registered in a parish are “fallen away” from fulfilling the obligation of attending Mass on every Sunday and Holy Day. Furthermore, how many are fallen away from meeting the standard that Paul enunciated? Paul was fearful that the “chaste virgin” church of Corinth would...

செப உணர்வு

செபத்தின் வல்லமையைப் பற்றி இயேசு, இந்த நற்செய்தியிலே (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15) நமக்கு தனது சிந்தனையைத் தருகிறார். ஒரு சில யூதர்கள் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செபித்தார்கள். அதற்கு யூதர்களின் செபமுறையும் உகந்ததாக இருந்தது. யூதர்கள் செபிக்கிறபோது, நின்றுகொண்டு செபித்தார்கள். அவர்களின் இருகரங்களம் விரிக்கப்பட்டு, உள்ளங்கைகள் வானத்தைநோக்கியும், அவர்களின் சிரம் தாழ்த்தியும் செபித்தார்கள். காலையும், மாலையும் அவர்கள் செபித்தார்கள். எந்த வேலையைச் செய்தாலும், இந்த வேளைகளில் எங்கிருந்தாலும் அவர்கள் செபிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் எப்படி செபிக்கிறோம்? என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்று செபித்தார்கள். குறிப்பாக தொழுகைக்கூடங்களின் முன்நின்று, நீண்ட நேரம், மற்றவர்கள் கண்ணில்படும்படி நின்றுகொண்டு செபித்தார்கள். ஒரு சில யூதப்போதகர்களே, மக்களை இத்தகைய செயலுக்காக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எனவே தான், வெளிவேடத்தனத்தோடு வேண்டப்படுகிற செபம், இறைவனால் கேட்கப்படாது என்று விளக்கம் கொடுத்தார்கள். நான்கு வகையான மக்களின் செபம் கேட்கப்படாது, என்று பொதுவாக மக்களால் நம்பப்பட்டது. கொலைகாரர்கள்,...