Author: Jesus - My Great Master

எலிசபெத்தம்மாளின் தாழ்ச்சி

”என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று எலிசபெத்தம்மாள் அன்னை கன்னிமரியாளைப் பற்றி சொல்கிறார். இதே தொணியில் நாம் இயேசுவின் வாழ்வில் செய்த ஒரு புதுமையிலும் பார்க்கிறோம். நூற்றுவர் தலைவன் தன்னுடைய பிள்ளைக்காக மன்றாடுகிறபோது, ”நீர் என் இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்” என்று சொல்கிறார். இந்த இரண்டு வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே தொணியில் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் நமக்கு ஒரே செய்தியைத்தான் தருகின்றன. எலிசபெத்தம்மாள் அன்னை மரியாளை விட வயதில் மூத்தவர். குழந்தை இல்லாமல் இருந்து, இப்போது குழந்தை பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார். இதுநாள் வரை இந்த சமூகம் அவரை, “மலடி“ என்ற பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்திருக்கிறது. தாங்க முடியாத வேதனையை நிச்சயம் எலிசபெத்தம்மாள் அனுபவித்திருப்பார். இவ்வளவு கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், தான் மகிழ்வதற்கு எவ்வளவோ காரியங்கள். காரணங்கள் இருந்தாலும், தாழ்ச்சியோட தன்னை விட வயதில் சிறியவராக இருக்கக்கூடிய அன்னை கன்னிமரியாளை, உள்ளத்தில்...

“REJOICE” THE LORD ALWAYS

“Is it not enough for you to weary men, must you also weary my God?” –Isaiah 7:13 Mass Readings: December 20 First: Isaiah 7:10-14; Resp: Psalm 24:1-6; Gospel: Luke 1:26-38 Listen to the Mass Readings Before writing this, I sat at two airports for several hours as my flights were canceled and/or delayed. I was very weary. Then I read Isaiah 7:13. In a manner of speaking, I weary God when I: complain and whine about my own weariness, refuse to “walk by faith” (see 2 Cor 5:7), sin, disobey the Lord, refuse to forgive, refuse to repent, gossip, waste...

அனைத்தும் அவருக்கே சொந்தம்

திருப்பாடல் 24: 1 – 2, 3 – 4, 5 – 6 மனிதன் தன்னுடைய வாழ்நாளில் செல்வம், சொத்து சேர்க்க ஆசைப்படுகிறான். தனக்கானது என்று அவன் சேர்த்து வைக்கிறான். அதற்கு உரிமையும் கொண்டாடுகிறான். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதனிடத்தில் இல்லை. தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறான். அதற்கு ஏற்றாற்போல, தன்னுடைய வாழ்வை அவன் நகர்த்துகிறான். இன்றைய திருப்பாடல், இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களுக்கு ஓர் ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே இறைவனுக்கு சொந்தம் என்கிற உண்மை தான் அது. இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களும், இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தான். இறைவன் தான், அனைத்திற்கும் தொடக்கமும், முடிவுமாக இருக்கிறார். இந்த பூமியில் இருப்பது மட்டுமல்ல, இந்த மிகப்பெரிய வான்வெளியின் தொடக்கம் அவரே. நாம் அனைவரும் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்கிற...

FRUIT FOR CHRISTMAS

“His wife was barren and had borne no children.” –Judges 13:2 Mass Readings: December 19 First: Judges 13:2-7,24-25; Resp: Psalm 71:3-6,16-17; Gospel: Luke 1:5-25 Listen to the Mass Readings Today the Church introduces us to the mother of Samson and to Elizabeth, the mother of John the Baptizer. Both of these women were barren, but the Lord miraculously made them fruitful. Are you barren, not physically, but spiritually? How many people have you helped lead to Christ this Advent? How many spiritual children have you begotten in the last couple of years? (see Phlm 10; 1 Cor 4:15) With how...

அர்ப்பணத்தின் நிறைவாக வாழ்ந்த செக்கரியா

குற்றமற்றவர்களின் வாழ்வில் எதற்காக சோதனை? ஒழுக்கத்தோடு, ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு வாழக்கூடியவர்களுக்கு எதற்காக கடினமான தருணங்கள்? இதுபோன்ற கேள்விகள் நாம் நேர்மையாக வாழ்கிறபோது, நமது உள்ளத்தில் எழக்கூடியவை. இந்த சோதனைகள் நமக்கு மட்டும்தானா? இல்லை. நம்மைப்போன்று வாழக்கூடிய எண்ணற்ற மனிதர்களுக்கும் நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செக்கரியா. செக்கரியா கடவுள் முன்னிலையில் குற்றமற்றவராய் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். ஒழுங்களுக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக்கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு குழந்தை இல்லை. எத்தனை ஆண்டுகள் நம்பிக்கையோடு வாழ்ந்திருப்பார். அந்த நம்பிக்கை வீண்போய் விட்டது. இருவரும் குழந்தை பெறக்கூடிய வயதை தாண்டியிருந்தார்கள். ஆனாலும், செக்கரியா கடவுள் முன் பணி செய்வதை பாக்கியமாக எண்ணி, தொடர்ந்து அர்ப்பண உணர்வோடு தன் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார். செக்கரியாவின் பொறுமை நமக்கு வியப்பைக் கொடுத்தாலும், கடவுளின் வல்லமை வெளிப்படுதவற்கு கூட, இப்படிப்பட்ட தருணங்கள் தேவையிருக்கிறது என்பதுதான் இங்கே புலப்படுகிறது. ஆக,...