Author: Jesus - My Great Master

திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

திருத்தூதர் பணி 9: 1 – 20 திறந்த உள்ளத்தினராக வாழ்வோம் சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்? சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம்...

FULL-PHIL-MENT

“The Spirit said to Philip, ‘Go and catch up with that carriage.’ Philip ran ahead and heard the man reading the prophet Isaiah. He said to him, ‘Do you really grasp what you are reading?’ ‘How can I,’ the man replied, ‘unless someone explains it to me?’ ” –Acts 8:29-31 Mass Readings: April 19 First: Acts 8:26-40; Resp: Psalm 66:8-9,16-17,20;Gospel: John 6:44-51 Listen to the Mass Readings Before we recognize the risen Christ, we need our hearts to burn as the Scriptures are interpreted for us (Lk 24:32). Jesus interprets the Scriptures for us not only by calling us to...

நம்மை உயிர் வாழச்செய்தவரும் அவரே

திருப்பாடல் 66: 8 – 9, 16 – 17, 20 ”நம்மை உயிர் வாழச்செய்தவரும் அவரே” திருப்பாடல் 66 ஒரு நன்றிப்பாடல். இது குறிப்பிட்ட நிகழ்வை வைத்து எழுதப்பட்ட பாடல் அல்ல. மாறாக, கடவுள் செய்து வந்திருக்கிற நன்மைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று, நம்மை உந்தித்தள்ளுகிற ஒரு பாடல். எல்லா மக்களுமே கடவுளைப் போற்றிப் புகழ அழைக்கப்படுகிறார்கள். இந்த திருப்பாடலின் சிறப்பு, தனிப்பட்ட முறையில் இறைவன் தனக்கு செய்திருக்கிற நன்மைகளை நினைத்து, தாவீது அரசர் பாடுவதாக இது சொல்லப்படுகிறது. அவருடைய துன்ப வேளையில் இறைவன் எவ்வாறெல்லாம், அவரைப் பேணிப்பாதுகாத்தார் என்பதுதான் இந்த திருப்பாடலின் மையச்சிந்தனையாக இருக்கிறது. மக்களினங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழ வேண்டும் என்று ஆசிரியர் அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பு எல்லா மக்களுக்கும் என்றாலும், குறிப்பாக இஸ்ரயேல் மக்களுக்கான அழைப்பாக இது பார்க்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக, இந்த அழைப்புவிடுக்கப்படுகிறது. முதல் காரணம், கடவுள் இஸ்ரயேல் மக்களை பல்வேறு...

HIS BODY

“It is the will of Him Who sent Me that I should lose nothing of what He has given Me.” –John 6:39 Mass Readings: April 18 First: Acts 8:1-8; Resp: Psalm 66:1-7; Gospel: John 6:35-40 Listen to the Mass Readings Creation, the human body, and the Body of Christ, the Church, are ecological. They are composed of many parts which inter-relate in very intricate ways. Therefore, “if one member suffers, all the members suffer with it; if one member is honored, all the members share its joy” (1 Cor 12:26). The Lord is constantly gracing the Church so that it...

இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

திருத்தூதர் பணி 8: 1 – 8 இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம் அழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன? ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள்? என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு...