Author: Jesus - My Great Master

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

திருப்பாடல் 100: 1 – 2, 3, 5 ”அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! திருப்பாடல் 100 சமய வழிபாடுகளில் அடிக்கடி தியானிக்கப்படக்கூடிய ஒரு பாடல். யூதர்கள் எப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தினார்களோ, அப்போதெல்லாம் இந்த பாடலையும் பாடி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். இந்த பாடல் கடவுளின் மகிமையை, மகத்துவத்தை, இனிமையை, சுவையை எடுத்துரைக்கக்கூடிய பாடல். அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். அனைத்துலகோரே என்று சொல்கிறபோது, அது இஸ்ரயேல் மக்களை மட்டும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளைப் புகழ வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அந்த புகழ்ச்சி சாதாரண புகழ்ச்சியாக இருக்கக்கூடாது. அது ஓர் ஆர்ப்பரிப்பாக இருக்க வேண்டும். ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள் என்றால் என்ன? திருப்பாடல் 98 சொல்கிறது: யாழினை மீட்டி வாழ்த்துங்கள். இனிய குரலில் வாழ்த்துங்கள். எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். ஆர்ப்பரிப்பு என்பது...

LASTING LOVE

“Your fruit must endure.” –John 15:16 Mass Readings: May 4 First: Acts 15:22-31; Resp: Psalm 57:8-12; Gospel: John 15:12-17 Listen to the Mass Readings Jesus, the Vine, commands us, the branches, to bear fruit that is not only abundant but also lasting (Jn 15:16). Our commitment to the Lord and the commitments of those whom we have led to the Lord will last, if these commitments are: “rooted in [Jesus] and built up in Him” (Col 2:7), confirmed by the Holy Spirit, founded on the rock of hearing and obeying God’s Word (Mt 7:24ff), in submission to the authority of...

என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது

திருப்பாடல் 57: 7 – 8, 9 – 11 ”என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது” இந்த திருப்பாடல் ஒரு வித்தியாசியமான திருப்பாடல். தாவீது அரசரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடி. ஒரு கலக்கமான நேரம். அது மட்டுமல்ல சோதனையான நேரமும் கூட. கலக்கத்தையும், சோதனையையும் ஒரே நேரத்தில் அவர் வெற்றி கொள்ள வேண்டும். அந்த வேதனையான நேரத்தில் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, அவரது உதவிக்காக இந்த பாடலைப் பாடுகிறார். கடவுள் மிக விரைந்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற வேண்டுதல் தான், இந்த திருப்பாடல். தாவீது அரசர் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதற்கு பலவிதமான எடுத்துக்காட்டுக்களை நாம் பார்க்கலாம். தாவீது அரசர் மிகப்பெரிய பலவீனர்தான். வெகு எளிதாக தவறு செய்யக்கூடியவர் தான். கடவுள் அவருக்குச் செய்திருக்கிற செயல்களையெல்லாம், மிக விரைவாக மறந்து விடக்கூடியவர் தான். ஆனாலும், எல்லாவிதமான சோதனை, இக்கட்டுக்கள் நிறைந்த தருணங்களில் அவர், கடவுளின் உதவியையும், ஆலோசனையையும்...

ON SPEAKING TERMS WITH YOUR ENEMIES

“Day pours out the word to day, and night to night imparts knowledge.” –Psalm 19:3 Mass Readings: May 3 First: 1 Corinthians 15:1-8; Resp: Psalm 19:2-5; Gospel: John 14:6-14 Listen to the Mass Readings To the man who would later be called “doubting Thomas,” Jesus gave one of the greatest revelations in the history of the human race. Jesus told Thomas: “I am the Way, and the Truth, and the Life; no one comes to the Father but through Me” (Jn 14:6). Jesus was profoundly disappointed in Philip, who did not know Jesus or His Father after “all this time”...

படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது

திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5 ”படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது” கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம்...