Author: Jesus - My Great Master

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம்

லூக்கா 1:39-56 உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களையும், சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தித்திப்பான நாளிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன். விண்ணேற்பு அன்னை மரியின் பரிந்துரையும், ஆண்டவரின் ஆசீரும் உங்களுக்கு நிறைவாகவே கிடைப்பதாக! இன்றைக்கு நம் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் விழா எடுக்கிறோம். இருவருக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் இருப்பதை நாம் பார்க்கலாம். தாய்க்கு எதற்காக? ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும். – “அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – என்கிறார் புனித தமசீன் நகர அருளப்பர். – “ஒரு மனிதனின் உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னை...

EAT HIS WORDS

“Eat this scroll, then go, speak to the house of Israel.” –Ezekiel 3:1 Rebellion against the Lord entails not only doing evil but also refusing to totally consume and be consumed by His callings (Ez 2:8). We must eat the scroll of God’s plan for our lives. We must internalize it, digest it, and make it part of ourselves. As we consume God’s callings, we are consumed by God (see Heb 12:29). When we internalize God’s plan, God lives in us and we in Him (see Jn 17:23). We lose our lives (Lk 9:24), and it is no longer we...

வேலைக்கு ஆட்கள் தேவை

மத்தேயு 18:1-5,10,12-14 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பல கடைகளிலே “வேலைக்கு ஆட்கள் தேவை” என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்திருக்கிறோம். அந்த பலகையைப் பார்த்து ஆட்கள் வேலைக்கு செல்வது உண்டு. அதே போன்று இன்றைய நற்செய்தி வாசகமும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்போடு வருகின்றது. என்ன வேலை? எப்படி செய்ய வேண்டும்? எவ்வளவு சம்பளம்? என்பதையும் விவரிக்கிறது. என்ன வேலை? நாம் நினைப்பது போன்று இது மனிதர்களால் தரப்படும் வேலை அல்ல. மாறாக இது இறைவனால் தரப்படுகின்ற பணி. எனன வேலை? இறைவனின் அன்பிலிலிருந்து விலகி சென்றவர்களை அவரிடம் கொண்டு வர வேண்டும், பாவங்களால் காணாமல் போனவர்களை பக்குவப்படுத்த வேண்டும், நெறி தவறியவரை மீட்க வேண்டும் இதுதான் வேலை....

OWNERSHIP AND GRIEF

“Do nothing to sadden the Holy Spirit with Whom you were sealed against the day of redemption.” –Ephesians 4:30 We want to love God the Holy Spirit, for we are begotten of the Spirit (Jn 3:8), are filled with the Spirit (see Acts 2:4), and follow the lead of the Spirit (Gal 5:25). Nevertheless, we can sadden or grieve the Holy Spirit (Eph 4:30). We have been sealed with the Holy Spirit (Eph 4:30). This means we have been marked or branded as owned by God. The Spirit’s work in our lives should be an exterior expression of this interior...

நல்ல குடிமக்களா? நாட்டை மதியுங்கள்…

மத்தேயு 17:22-27 இயேசுவும் சீடர்களும் எங்கெல்லாம் சென்றாலும் அவர்களை மறைநூல் அறிஞர்களும், சதுசேயர்களும், பரிசேயர்களும் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். இயேசுவை எந்த ஒரு பெரிய கண்ணியிலும் சிக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்கிறார், ஓய்வு நாளை மதிப்பதில்லை போன்ற சில காரணங்களை வைத்துக் கண்டு அவரை தீர்த்துக் கட்டவும் அவர்களால் முடியவில்லை. ஆகவே புதிய ஒரு முயற்சியை கையிலெடுத்தனர். அதுதான் வரி செலுத்தவில்லை என்பது. அந்நாட்களில் உரோமை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களிலும் ஏராளமான வரிகளை மக்கள் செலுத்தவேண்டியிருந்தது. அதில் முக்கியமான இரண்டு வரிகள், ஒன்று நிலவரி, இன்னொன்று சொத்து வரி. சொத்து வரி என்பது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை அரசுக்கு வரியாகச் செலுத்துவது. விளைவது பழவகைகள் என்றால் அவற்றில் ஐந்தில் ஒரு பங்கை வரியாகச் செலுத்தவேண்டும். இவை தவிர ஒவ்வொரு முறை நகருக்குள் நுழைவதற்கும், வியாபாரத்திற்கும், அதற்கும் இதற்கும் என...