Author: Jesus - My Great Master

உண்மையான விசுவாசம்

Success does not mean winning the battle, but winning the war – என்று பொதுவாகச் சொல்வார்கள். போர் என்பது பல நாட்களாக நடக்கக்கூடியது. அதிலே ஒருநாள் வெற்றிபெற்றால், எதிரியை விட சிறப்பாக செயல்பட்டால், அது உண்மையான வெற்றியல்ல. இறுதியாக யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, எதிரியைத் தோற்கடிக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள். ஒரு விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக பலநாட்கள் செலவழிக்கிறார். அதிலே தோல்வி மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று, இத்தனை நாட்களாக தான், எதற்காக உழைத்தோமோ அதனை அவர் சாதிக்கிறபோது, வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் வெற்றி. இதனை மையப்படுத்தி தான், இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கிறது. இயேசுவின் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்று யாரிடமாவது கேட்டால், அவரது இறப்பை வைத்து அதை தோல்வி என்று தான் சொல்வார்கள். அவர் அநீதியாக தீர்ப்பிடப்பட்டார் என்று தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ப்பு இயேசுவின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது....

ARE YOU DOING YOUR JOBS?

“The congregations grew stronger in faith and daily increased in numbers.” —Acts 16:5 The Lord insists that we bear abundant, lasting fruit (Jn 15:5, 16). Consequently, it is good to ask ourselves: “How many people have I tried to lead to a total commitment to the Lord through my love, service, witness, words, prayer, and fasting?” Another crucial question we should ask ourselves is: “How many Christians have I tried to lead into leadership in the Church?” For example, when St. Paul heard of Timothy’s faith, he was eager to have Timothy go on mission and begin apprenticeship for leadership...

உலகைச் சார்ந்தவர்கள் அல்ல !

இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக இயே நமக்குத் தரும் செய்தி: “நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல”. இயேசு உலகினரை இரு பிரிவினராகப் பிரிக்கவே வந்தார். இருளைச் சார்ந்தவர்கள், ஒளியைச் சார்ந்தவர்கள், இந்த உலகைச் சார்ந்தவர்கள், இவ்வுலகில் வாழ்ந்தாலும், விண்ணைச் சார்ந்தவர்கள். இயேசுவின் சீடர்கள் அனைவரும் இரண்டாம் பிரிவைச் சொந்தமாக்கிக்கொண்டவர்கள். நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர். இவ்வுலகின் தலைவன் என அழைக்கப்படும் அலகையின் அடிமை அல்ல. மாறாக, விண்ணகமே நமக்குத் தாய்நாடு. நாம் இங்கே பயணிகள் மட்டுமே. நமது கால்கள் மண்ணில் இருந்தாலும், நமது கண்களும், இதயமும் விண்ணை நோக்கிய வண்ணமே இருக்கவேண்டும். நமது எண்ணங்கள் இவ்வுலக எண்ணங்கள் போல் இல்லாமல், நமது கவலைகளும் இவ்வுலகக் கவலைகளாக இருக்கக் கூடாது. நாம உயிர்ப்பின் மக்கள். ஆவியின் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, நமது வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வோமாக. மன்றாடுவோம்: எங்களின் ஆர்வமும், ஆற்றலுமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தந்தை...

THE FRUIT OF LOVE

“It was not you who chose Me, it was I Who chose you to go forth and bear fruit.” —John 15:16 In the very first chapter of the Bible, we hear the Lord’s first words to the newly created human race. He commanded us to bear fruit (Gn 1:28). We are chosen specifically for the purpose of bearing much fruit that will last (Jn 15:16, 5). Shortly before His Ascension, Jesus commanded us to go and make disciples of all nations, that is, to bear the fruit of holiness and evangelization (Mt 28:19). We will come to a tragic end...

உயிர்ப்பு தரும் அர்ப்பணம்

திருத்தூதர் பணி 15: 22 – 31 இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததில், தூய பவுலடியார் எந்த அளவுக்கு முன்மதியோடும், அர்ப்பண உணர்வோடும் செயல்பட்டார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிலர் மக்களை குழப்புகிற நேரத்தில், சரியானவிதத்தில் அதனைக் கவனித்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சரியான ஆட்களை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய கடிதத்தின் மூலமாகவும் சிறப்பாக அவர்களை வழிநடத்துகிறார். அவருடைய கடிதத்தை வாசித்துக் கேட்டவுடன், மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது. இறைமக்களை விசுவாசத்தில் கட்டியெழுப்ப, எவ்வளவுக்கு சாதாரண காரியங்களில் எல்லாம் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது, இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதில் தன்னுடைய நேரம் முழுவதையும் செலவிட்டார். எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ, அதனை விட பல மடங்கு கிறிஸ்துவுக்காக உழைத்தார். பவுலின் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கான காரணத்தைத் தேடுகிறபோது, உயிர்ப்பு தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது. உயிர்த்த இயேசுவின் அனுபவம் அந்த...