என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு
திருப்பாடல் 136: 1 – 3, 16 – 18, 21 – 22&24 நன்றி என்கிற மூன்றெழுத்து வார்த்தை, நம்முடைய மூச்சோடு கலந்துவிட்ட வார்த்தை. நமக்கு நன்மை செய்கிறவர்களை உள்ளன்போடு நினைத்துப்பார்ப்பது நம்முடைய கடமை. ஒருவர் நன்மை செய்கிறபோது அல்லது நமக்கு உதவி செய்கிறபோது, நன்றி என்ற வார்த்தையை உதிர்க்கிறோம். நன்றி என்ற வார்த்தை பொதுவாக உச்சரிக்கப்பட்டாலும், அது உதட்டளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும், உள்ளத்தளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும் உணரப்படுகிறது. நன்றி என்ற வார்த்தை எப்போது உச்சரிக்கப்பட்டாலும் அது உணர்வுப்பூர்வமாகவும், உதட்டளவிலும் அமைந்துவிடாமல், உள்ளத்திலிருந்து எழுவதாக அமைய வேண்டும். அதுதான் இன்றைய திருப்பாடல் நமக்கு தருகிற செய்தி. நன்றி என்பது மூன்றாவது நபருக்கு வார்த்தையால் சொல்லிவிடுகிறோம். நம்மைப் பெற்றெடுத்து, நம்மை பேணிவளர்த்த நம்முடைய அன்புப்பெற்றோருக்கு நாம் எப்போதும் நன்றி என்று சொல்வதில்லை. அப்படிச்சொல்லப்படுகிற வார்த்தையை எவரும் விரும்புவதும் இல்லை. காரணம், அது நம்முடைய நெருங்கிய உறவுகளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடுகிறது. அப்படியென்றால், நம்முடைய...