Author: Jesus - My Great Master

இன, மொழித் தடைகள் தகர்க !

மார்டின் லூத்தர் கிங் அவர்களின் “எனக்கொரு கனவு உண்டு. ஒருநாள் வெள்ளை நிறக் குழந்தைகளும், கறுப்பினக் குழந்தைகளும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடப்பர்” என்னும் பிரபலமான கனவை இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆம், இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவனின் மாபெரும் கனவொன்று வெளிப்படுகிறது. “பிற இனத்தார், பிற மொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன். அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள்” என்று உரைக்கிறார் ஆண்டவர். இதுதான் இறைவனின் கனவு. மண்ணுலகில் வாழும் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள். எந்தவிதமான பிளவுகளோ, தடைகளோ இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இறைவனின் இந்தக் கனவு நிறைவேறுவதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ஆண்டவரே, மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்;னும் கேள்விக்கான விடையை இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்கிறோம். அனைவருக்கும் மீட்பு உண்டு. ஆனால்,...

GOING THROUGH THE MOTIONS OF HOPE?

“Hoping for what we cannot see means awaiting it with patient endurance.” —Romans 8:25 A lengthy waiting period can either make or break our hope. We can react by growing bitter and losing hope. “Hope deferred makes the heart sick” (Prv 13:12). For example, a man had been sick for thirty-eight years (Jn 5:5ff). Although he daily placed himself in a position of hope by the side of healing waters, he didn’t expect to be healed. When Jesus came to him, he had excuses instead of expectations (Jn 5:7). He built his life around going through the motions of hope,...

கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்

திருப்பாடல் 126: 1ஆ – ஆ, 2இ – 3, 4 – 5, 6 இஸ்ரயேலின் ஆண்டவர் கண்ணீரைத் தரக்கூடிய இறைவன் அல்ல, மாறாக, கண்ணீரைத்துடைத்தெடுக்கிற இறைவன். எங்கெல்லாம் மானிட சமுதாயம் கண்ணீர் வடிக்கிறதோ, இறைவனிடம் முறையிடுகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் கண்ணீர் வடிக்கிறவரின் தகுதியைப் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார். மீட்பின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கிறபோது, இந்த உண்மையை நாம் கண்கூடாக பார்க்கலாம். தொடக்கநூலில் காயினும் ஆபேலும் பலி செலுத்துகிறபோது, கடவுள் ஆபேலுடைய பலியை ஏற்றுக்கொள்கிறார். காயீன் பொறாமையினால் தன் சகோதரனை கொன்றுவிடுகிறான். கடவுள் காயீனை தண்டிக்கிறார். ஆனால், காயீன் கடவுளிடத்தில் “என்னைப் பார்க்கிறவர் யாரும் கொன்றுவிட முடியுமே” என்று முறையிடுகிறான். தீங்கு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிற கடவுள், அவன் முறையிடுகிறபோது, அவனுக்கு ஓர் அடையாளமிட்டு அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுளின் அருளைப்பெற தகுதி இல்லையென்றாலும், அவன் பாதுகாப்பு பெறுகிறான். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து,...

PASS IT ON

“He called His disciples and selected twelve of them to be His apostles.” —Luke 6:13 Recently, a bishop was ordained by the Church. He later told people that he cried tears of joy as hands were imposed on him. He spoke of the awe he felt at realizing that the hands laid on his head traced an unbroken chain of succession all the way back to Jesus’ first calling of His apostles. The Lord renews the face of the Church (see Ps 104:30) through the apostles and their successors, the bishops. The Church is built upon “the foundation of the...

செபிக்கும் மனநிலை

பரிசேயர் மற்றும் வரி தண்டுபவரின் செபத்தைப்பற்றிய ஓர் ஆய்வை இயேசு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சி வாயிலாக, நமது செபம் எப்படி இருக்கக்கூடாது? மற்றும் எப்படி இருக்க வேண்டும்? என்கிற செய்தியையும் அவர் நமக்குத்தருகிறார். பரிசேயன் ஆலயத்திற்குச் சென்றது செபிப்பதற்காக அல்ல, மாறாக தன்னைப்பற்றிப் புகழ்வதற்காகத்தான் என்பது அவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒருவன் எப்படி? என்பது அவன் சொல்லித்தான் கடவுளுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. பரிசேயன் சொன்னது அனைத்தும் உண்மைதான். அவன் சொல்லாவிட்டாலும் கடவுளுக்குத் தெரியும். எனவே, நம்மைப்பற்றிப் பெருமைபாராட்டுவதில் நாம் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வரிவசூலிக்கிறவர் தனது நிலையை எண்ணிப்பார்க்கிறார். தனது வாழ்வைச் சிந்தித்துப்பார்க்கிறார். தான் இதுநாள் வரை நடந்துவந்த அந்தப் பாதையை பின்னோக்கிப்பார்க்கிறார். தான் பாவி என்பதை உணர்கிறார். கடவுளுக்கேற்ற வாழ்வு தான் வாழவில்லை என்பதை அறிகிறார். தனது தவறுக்காக மனம்வருந்துகிறார். நேர்மையான முறையில் வாழ, அவர் இறைவனின் மன்னிப்பிற்காக, அருளுக்காகக் காத்திருக்கிறார். செபம் என்பது நமது வாழ்வை கடவுள் முன்னிலையில்...