Author: Jesus - My Great Master

தேடி போ! உயரே கொண்டு வா!

மத்தேயு 18:12-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இவ்வுலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள். பயனற்றவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரையும் கடவுள் தாயின் கருவறையில் அர்ச்சித்து அற்புதமான பணி செய்ய அழைக்கின்றார். யாரையும் ஒதுக்காதீர்கள், யாரையும் வெறுக்காதீர்கள் என்ற அன்பான வேண்டுகோளோடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். குறைகள் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு வரை இந்த நாள் நம்மை அழைக்கிறது. குறைகள் இருந்தாலும் உற்சாகத்தினால் மேலே வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உயரே வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் இதோ இரண்டு சாதனையாளர்கள்: 1. நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் (Nicholas James Vujicic) என அழைக்கப்படும், 36 வயது...

ADVENT TO THE MAX

“…a herald’s voice in the desert: ‘Prepare the way of the Lord, make straight His paths.’ ” —Matthew 3:3 The purpose of Advent is to prepare the way of the Lord, Who is coming to us in a new personal way this Christmas season. But there are different kinds and degrees of preparation. The Church teaches with John the Baptist that our preparation for Christ’s coming this Christmas needs to be very extensive. We even need a baptism of repentance, that is, to be immersed in repentance (see Mt 3:11). Our preparation for Christ this Christmas is comparable to a...

மன மாற்றம்..

மக்கள் மனமாற்றம் பெறவேண்டும் என்று திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தி பண்டைக்காலத்தில் எசாயா இறைவாக்கினர் கூறிய செய்தியை எதிரொலிக்கிறது. ”ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” (காண்க, எசா 40:3) என எசாயா அன்று கூறியது பாபிலோனிய அடிமைநிலையிலிருந்து மக்கள் விடுதலை பெற்ற நல்ல செய்தியை முன்னறிவித்தது. உண்மையிலேயே அது ஒரு புதிய ”விடுதலைப் பயணமாக” அமைந்தது. யோவான் பாலைநிலத்தில் ஒலிக்கின்ற குரலாக வந்தார்; வரவிருக்கின்ற மெசியாவின் வருகையை அறிவித்தார். உண்மையிலேயே அவர் கடவுளின் குரலாகச் செயல்பட்டார். அதே நேரத்தில் அவர் மணமகனாகிய இயேசுவின் தோழனாகச் செயல்பட்டு அம்மணமகனைப் பாலைநிலம் வர அழைக்கும் குரலானார். யோவான் அறிவித்த மனமாற்றம் எதில் அடங்கியிருக்கிறது? தவறான வழியில் செல்வோர் தாங்கள் செல்ல வேண்டிய வழி இன்னொன்று என்று தெரிந்ததும் உடனே திரும்பி சரியான வழியில் நடக்கத் தொடங்குவர். இதையே யோவான் மக்களிடம் கேட்டார். எனவே மனமாற்றம் என்பது தவற்றைக் களைந்து நல்லதைத் தழுவுவது என்னும் பொருள்கொண்டது. மனமாற்றம்...

IS IT CHRISTMAS YET?

“The reign of God is at hand.” —Matthew 10:7 When the Messiah, the Christ, comes: “No more will you weep” (Is 30:19). Our prayers will be answered quickly (Is 30:19). The Lord will meet our needs (Is 30:20). The Lord, our Teacher, will give us practical direction for our lives (Is 30:20-21). We will prosper (see Is 30:23ff). We will live in a supernatural light (Is 30:26). The Lord will bind up our wounds and heal us (Is 30:26). Partly because these messianic promises do not seem fulfilled, conservative Jews believe that the Messiah, the Christ, has not yet come...

ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்

திருப்பாடல் 147: 1 – 2, 3 – 4, 5 – 6 காத்திருத்தல் என்பது சுகமான அனுபவம். அது சுமையான அனுபவமாகவும் இருக்கலாம். ஒரு மாணவர் தேர்விற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார். தன்னை முழுவதுமாக தயாரித்திருக்கிறார். அந்த மாணவருக்கு தேர்வு எப்போது வரும்? தான் தேர்வில் எப்போது கலந்துகொண்டு, என்னுடைய திறமையைக் காட்டுவேன் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார். அதேவேளையில், பேருந்துக்காக காத்திருக்கிற மனிதர், ஒரு மணி நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால், அவரது மனம் பதைபதைத்துக்கொண்டே இருக்கும். ஆக, காத்திருத்தல் சுகமாகவும், சுமையாகவும் இருக்கிறது. ஆண்டவருக்காகக் காத்திருப்பது இது போன்ற அனுபவம் தான். ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையில் செயலாற்றுவார் என்று காத்திருக்கிறோம். ஆனால், நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் இறைவனை நம்புகிறோம். அப்போதும் அது நடக்கவில்லை. பெரும்பாலான மனிதர்கள் இந்த தருணத்தில், நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு காத்திருத்தல் சுமையாகிவிடுகிறது. ஆனால், என்ன...