Author: Jesus - My Great Master

கடவுளை ஏற்றுக்கொள்ள …

”என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்று இயேசு கூறுகிறார்? இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு எது தடையாக இருக்கிறது? நாம் இயேசுவிடத்தில் செல்வதற்கு என்ன தயக்கம்? இயேசுவை ஏற்றுக்கொள்வது எளிதானது போல தோன்றினாலும், அது சவால்கள் நிறைந்த பாதையாக இருக்கிறது. அதுதான் இங்கே தடையாக, தயக்கமாக இயேசுவால் சுட்டிக்காட்டப்படுகிறது. இன்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு நம்முடைய பதவி, நாம் பெற்றிருக்கிற பட்டங்கள், நாம் சேர்த்து வைத்திருக்கிற செல்வங்கள் தடையாக இருக்கிறது. ஏனென்றால், நாம் இயேசுவின் மீது நாட்டம் வைத்திருப்பதை விட, மேற்சொன்னவைகள் மீதுதான் அதிக நாட்டம் வைத்திருக்கிறோம். அதுதான் நமக்கு பெரியதாகத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட எண்ணங்களை மாற்றுவது என்பது எளிதானது அல்ல. ஏனென்றால், நாம் வாழக்கூடிய இந்த உலகமும் இதுபோன்ற சிந்தனைகளை நமக்குத் தந்துகொண்டே இருக்கிறது. நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு இவையெல்லாம் தடையாக இருக்கிறதா? தடையாக இருந்திருக்கிறதா? என்று சிந்திப்போம். எந்நாளும் நாமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வதற்கு, கடவுளின் அருள் வேண்டி மன்றாடுவோம். அருட்பணி. ஜெ....

PREPARING TO PREPARE FOR CHRISTMAS

“Elijah has already come, but they did not recognize him.” —Matthew 17:12 The prophetic ministry of Elijah prepared the way for the prophetic ministry of St. John the Baptizer. John prophesied “in the spirit and power of Elijah” (Lk 1:17). Jesus even stated that John “is Elijah” (Mt 11:14). Elijah prepared the way for John, who came to “prepare the way of the Lord” (Mt 3:3). God prepared the way for His Son’s coming for centuries. He sent prophet after prophet. He gave visions, warnings, and encouragements. In fact, the entire Old Testament points to the coming of Jesus, the...

சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!

மத்தேயு 17:9, 10-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும். 1. கற்பதில் சீர்திருத்தம் நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து...

ERASED

“Their name never cut off or blotted out from My presence…” —Isaiah 48:19 When we decide to commit our lives to Jesus and express our faith through Baptism, our names are inscribed in the book of the living. This decision to accept Christ is more important than anything else in life. Jesus said: “Do not rejoice so much in the fact that the devils are subject to you as that your names are inscribed in heaven” (Lk 10:20). On Judgment Day, anyone whose name is “not found inscribed in the book of the living” will be hurled into the pool...

இறைவனின் குரலுக்குச் செவிகொடுப்போம்

எசாயா 48: 17 – 19 இஸ்ரயேல் மக்கள் எந்த இடத்தில் தடம்புரண்டார்கள்? அவர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணம் என்ன? என்பதை, இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை இதுநாள் வரை வழிநடத்தி வந்து, வெற்றி தேடிக்கொடுத்த, இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் நடந்தது தான், அவர்களின் மோசமான நிலைக்கு காரணமாக, இறைவாக்கினர் அறிவிக்கின்றார். இறைவன் ஒருவா் தான், பயனுள்ளவற்றையும், மனிதர்கள் மகிழ்ச்சியாயிருக்கத் தேவையானவற்றையும் கற்பிக்கிறவர். ஆனால், மனிதன், கடவுளை நம்பாமல், வேற்றுத் தெய்வங்களையும், வேற்று நாட்டினரையும் நம்பி மோசம் போனான். அப்படி அவர்கள் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து, மற்றவர்களைப் புறம்தள்ளியிருந்தால், இன்றைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். பலவற்றை இழந்திருக்க மாட்டார்கள். அவர்களது பெயர் கடவுளின் திருமுன்னிலையிலிருந்து அகற்றப்பட்டிருக்காது. இப்போதோ, அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கான வழி அடைக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு, இறைவனின் வார்த்தைக்கு செவிகொடுத்தாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வரும். அவர்கள் மீண்டும் இழந்தவற்றைப்...