யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியின் தொடக்கத்திலேயே, தன்னுடைய நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார். எதற்காக தான், நற்செய்தியை எழுதுகிறேன் என்பதையும், யாருக்காக நற்செய்தியை எழுதுகிறேன் என்பதையும் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலேயே சொல்லவிடுகிறார்? அதனுடைய அடித்தளம் தான், யூதர்கள் திருமுழுக்கு யோவானிடம் கேள்விகேட்பது. நற்செய்தியில் எழுபது இடங்களில் “யூதர்கள்“ என்கிற வார்த்தை பயன்பட்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் அவர்கள் இயேசுவுக்கு எதிராக கேள்வி கேட்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இயேசுவுக்கும், யூதர்களுக்கும் இடையே இருந்த அந்த எதிர்ப்பு முதல் அதிகாரத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக, நற்செய்தியாளர் கடவுள் தன்னை இயேசுவின் வடிவில் வெளிப்படுத்துகிறார் என்பதையும், ஆனால், யூதர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் நற்செய்தி முழுவதும் சிறப்பாக எடுத்துச்சொல்கிறார். இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானிடம் இரண்டு தரப்பினர் அவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியை கேள்விகேட்கின்றனர். முதல் தரப்பு, குருக்களும், லேவியர்களும். திருமுழுக்கு யோவான் செக்கரியா என்கிற குருவின் மகன். குருத்துவம் என்பது குடும்ப வழியில் வருவது. அதிகாரவர்க்கத்தினரின் எண்ணப்படி, திருமுழுக்கு யோவான் ஒரு...
Like this:
Like Loading...