Author: Jesus - My Great Master

வாழ்வைக் கொடுக்கக்கூடியவர்களாக….

இயேசு தனது சீடர்களை பணிக்கு அனுப்புகிறபோது, பயணத்திற்கு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். பொதுவாக, பயணம் செய்கிறவர்கள் பொதுவாக, உணவு, பை, இடைக்கச்சையில் பணம் எடுத்துச் செல்வார்கள். பயணிகளுக்கான பை, விலங்கின் தோலிலிருந்து செய்யப்பட்டது. அது விலங்கின் வடிவத்திலே செய்யப்பட்டிருக்கும். அந்தப் பையில், பயணத்திற்கு தேவையான அப்பமோ, உலர்ந்த திராட்சையோ வைத்திருப்பார்கள். ஆனால், இயேசு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார். மத்திய கிழக்குப் பகுதியில் போதிக்கின்றவர்கள், திருப்பயணிகளாகச் செல்கிறவர்களும் இதுபோன்ற பைகளை வைத்திருப்பார்கள். இந்த பைகளை வைத்திருக்கும் குருக்களும், பக்தர்களும் அவர்களின் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வசூலிப்பதற்கும், அதில் கிடைப்பதை தங்களது தெய்வத்திற்கான காணிக்கை என்றும், மக்களிடம் சொல்லி, காணிக்கைப் பிரிப்பர். இப்படிப்பட்ட பக்தர்களுக்கு மக்கள் தாராளமாக கொடுத்தனர். ஆனால், இயேசு தன்னுடைய சீடர்களை இந்த பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் சீடர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல,...

LORD, “INCREASE OUR FAITH” (LK 17:5)

“He could work no miracle there, apart from curing a few who were sick by laying hands on them, so much did their lack of faith distress Him.” —Mark 6:5-6 Will you travel somewhere today? I drove to morning Mass, and then to work. I had faith that the roads were in good condition, that no bridges were going to collapse, and the roads on which I was driving still led to the same places they led yesterday. I had faith in these structures made by the Ohio Department of Transportation. People have faith in worldly things, such as roads....

சிந்திக்கத் தெரிந்தவர்களாக…

ஒரு துளி விஷம், பால் முழுவதையும் விஷமாக்கிவிடுகிறது. அதுபோலத்தான் கெட்ட எண்ணங்களும், கெட்ட குணங்களும். இயேசு தனது ஊருக்கு வந்து, ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்க வருகிறார். அங்கே ஏற்கெனவே, அவரைப்பற்றிய தவறான எண்ணத்தை ஒருசிலர் பரப்பிவருகின்றனர். சற்று ஆழமாகப் பார்த்தால், முதலில் மக்கள் வியப்படைகிறார்கள். அவரது போதிக்கும் ஆற்றலைப் பார்த்து, அதிசயிக்கிறார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, இவ்வளவு ஆற்றலோடு நற்செய்தியைப் பறைசாற்றும் இயேசுவிடத்தில், அவர்களுக்கு உண்மையிலே அதிகமான ஈர்ப்பு. ஆனால், அவர்கள் உள்ளத்தில் துளி விஷத்தை, கெட்டவர்கள் ஊற்றிவிடுகிறார்கள். அது அப்படியே கடைசிவரிகளில் பிரதிபலிக்கிறது. எது நல்லது, எது கெட்டது என மக்களே, சிந்தித்து, முடிவெடுக்க ஆற்றல் இல்லாதவரை, உண்மைக்கெதிரான இந்த போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கும். ஏமாற்றுகிறவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். உண்மையை நாம் உரைப்பதைவிட, உண்மையை உணரும் ஆற்றலை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசியல்வாதிகள் இலவசங்கள் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய்க்கு கூட தேராத பொருட்களைக் கொடுத்து, பேருந்து...

FATHER’S DAY

“My son Absalom! My son, my son Absalom! If only I had died instead of you, Absalom, my son, my son!” —2 Samuel 19:1 David grieved deeply upon hearing of the death of his son Absalom, who had rebelled against him. However, the true grief of this situation is that it might have been prevented if David had a heart for reconciliation with Absalom a few years earlier. A rift had occurred in David’s family. David’s son Amnon raped Absalom’s blood sister Tamar. David took no action to deal with the situation; he simply “became very angry” (2 Sm 13:21)....

நம்பிக்கையின் ஆழம்

மாற்கு நற்செய்தியாளர் ”தலித்தா கூம்” என்கிற அரேமேய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதற்காக மாற்கு நற்செய்தியாளர் கிரேக்க மொழியில் தனது நற்செய்தியை எழுதுகிறபோது, அரேமேய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்? மாற்கு நற்செய்தியாளர் இந்த வார்த்தையை பேதுருவிடமிருந்து அறிந்திருக்க வேண்டும். பேதுரு இயேசுவின் மூன்று முக்கிய சீடர்களுள் ஒருவர். இறந்த சிறுமியை உயிர்ப்பிக்கும்போது, அவர் இயேசுவோடு நிச்சயம் இருந்திருப்பார். இறந்த போயிருக்கிற சிறுமி உயிரோடு எழுந்தது, பேதுருவின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் நிச்சயமாக பதிந்திருக்கும். அந்த நிகழ்வு அவருடைய கண்களை விட்டு எளிதாக அகலக்கூடியது அல்ல. எனவே, இயேசு பயன்படுத்திய ”தலித்தா கூம்” என்கிற வார்த்தை நிச்சயமாக அவர் மறந்திருக்க மாட்டார். அதனால் தான் அந்த வார்த்தை மறக்கப்படாமல் இங்கே பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியில் இரண்டு விதமான மனநிலையைப்பார்க்கிறோம். 1. சுற்றிருக்கும் மக்கள் கூட்டம் நம்பிக்கையிழந்த மனநிலையோடு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இயேசு நம்பிக்கையோடு காணப்படுகிறார். அதன் வெளிப்பாடுதான் ”அஞ்சாதே” என்கிற வார்த்தை. 2....