ஆண்டவர் இரக்கமும், அருளும் கொண்டவர்
திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8, 10, 12 – 13 விவிலியம் முழுவதும் நாம் பார்த்தோமென்றால், இந்த இரண்டு பண்புகளையும் நாம் கடவுளின் பண்புகளாகச் சுட்டிக்காட்ட முடியும். இரக்கம் என்பது மனம் இளகுதல், மனம் இரங்குதல் என்று பொருள்படுத்தலாம். கடவுள் மனம் இரங்குகிறவராக, இளகுகிறவராக இருக்கிறார். இஸ்ரயேல் மக்கள் பல தவறுகளைச் செய்தார்கள். அந்த தவறுகளை அவர்கள் அறியாமல் செய்யவில்லை. தெரிந்தே செய்தார்கள். தாங்கள் செய்வது தவறு என்பது தெரிந்தும், அது கடவுளுடைய கோபத்தைக்கிளறும் என்பதை அறிந்தும் தவறு செய்கிறார்கள். ஆனாலும், இறைவன் அவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார். இறைவன் இரக்கம் காட்டி, மன்னிப்பு மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு தன்னுடைய அருளையும் அதிகமாகத்தருகிறார். பொதுவாக, நமக்கு எதிராக தவறு செய்கிறவர்களை மன்னிப்பதற்குக் கூட நமக்கு மனமிருக்காது. ஒருவேளை மற்றவர்களின் தொந்தரவின் பொருட்டு, அவர்களை நாம் மன்னிக்கலாம். ஆனால், அவர்களுக்கு உதவி செய்வதோ, அவர்கள் நன்றாக இருக்க...