Author: Jesus - My Great Master

அக்கரையில் அவரின் அக்கறை

(யோவான் 21 : 1-14) உயிர்ப்பும், உயிர்த்த உடலும் எப்படியிருக்கும் என்ற செய்தியைத் தருவதோடு இயேசுவின் அன்பையும் அக்கறையையும் இந்நிகழ்வு இன்னும் அதிகமாக எடுத்துக் கூறுகின்றது. திருத்தூதர்களில் சிலரைத் தவிர அனைவரும் படிப்பறிவற்ற சாதாரண மீனவர்கள். இவர்களுக்கு இன்றைய அரசியல்வாதிகள் போலவோ, மாமேதைகள் போலவோ கதை கட்டத் தெரியாது. இவர்கள் கற்பனை உலகில் வாழ்பவர்களல்ல. எதார்த்தத்தை எதார்த்தமாக எதிர்ப்பவர்கள். கண்ட காட்சிகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமளவிற்கு முட்டாள்களுமல்ல. தாங்கள் கண்டதை, தொட்டுணர்ந்ததை உலகிற்கு அறிவித்தனர். இயேசு வெறும் ஆவியன்று என்பதற்கு சான்றுதான் இந்நிகழ்ச்சி. அதேநேரத்தில் அவர் நம்மைப் போன்ற உடலைக் கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை. மாட்சிமை நிறைந்த உடலையே அவர் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆவி, கை நீட்டி இப்பக்கம் வலையைப் போடுங்கள் என்று சொல்லுவதில்லை. நெருப்பு மூட்டி மீன் சாப்பிடுவதில்லை. இதன் மூலம் நமக்கு அதிகமாக இல்லாவிட்டாலும் உயிர்ப்பைப் பற்றிய சில தெளிவுகள் கிடைக்கின்றன. நமது வாழ்விற்கு இன்றைய நற்செய்தி வலுவூட்டுவதாக அமைகிறது....

HIS STANDARDS AND HIS POWER

“God raised Him from the dead, and we are His witnesses.” —Acts 3:15 If we are not Resurrection-witnesses like Mary Magdalene and the post-Pentecost apostles, we should not make excuses, but rather admit that being a powerful witness for the risen Christ is normal Christianity (see Acts 4:33; 3:15; Lk 24:48-49). To be a Resurrection-witness, we must simply repent, renew our Baptisms, and receive the Holy Spirit (Acts 2:38). We may think we have already done this. Yet have we repented and converted by God’s standards? (see Acts 3:19) Most of us know that we must repent of doing things...

கலக்கத்தைக் கலகலப்பாக்க!

(லூக்கா 24 : 35-48) அகக்கண்கள் திறந்திருந்தாலும் அவர்களின் மனக்கண்கள் மூடியே இருந்தன. இதுவரை ஒருவருக்கும் இருவருக்குமாய் தோன்றி தன்னை வெளிப்படுத்திய ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் சீடர்கள் அனைவரும் குழுமியிருக்க அங்கே தன் உயிர்ப்பின் மாட்சியை வெளிப்படுத்துகிறார். அவர் இறப்பினைப் பற்றி முன்னறிவிக்கும் போது புரியாதவை இப்பொழுது மட்டும் என்ன புரியவா போகின்றது? இது இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் இயேசு உயிர்ப்பினைப் பற்றி அவர்கள் உணர கடும் பாடுபடுகிறார். இந்த சிரமத்தை அவர் இறப்பதற்கு முன்பாக எடுக்கவில்லையே! காரணம், இயேசு இறந்துவிட்டதால் சீடர்கள் அனைவரும் கலக்கமும், பீதியும் அடைந்திருந்தார்கள். வாழ வேண்டுமா அல்லது யூதாசினைப் போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா அல்லது பேதுருவைப் போல அதிகார வர்க்கத்தினருக்குப் பயந்து இயேசுவை மறுதலிக்க வேண்டுமா என்றெண்ணி கூனிக்குருகி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு உயிர்த்துவிட்டார் என ஆங்காங்கே கேள்விப்படுவதைக் கேட்டு இவர்களின் கலக்கம் குழப்பமாக மாறியது. இது இவர்களுக்கு இன்னும்...

MY SWEET JESUS!

“I have seen the Lord!” —John 20:18 At a college “Encounter with Christ” retreat many years ago, I had a “Mary Magdalene” moment. The retreat director asked everyone to find a quiet location and spend an hour reading letters written to us by fellow students. I walked through the snow-covered woods to a secluded hilltop overlooking a frozen lake and sat atop a tree stump to read and pray. Each letter radiated encouragement, hopes, and prayers. The final letter ended with a Bible verse: “No one lights a lamp and then puts it under a bushel basket” (see Lk 8:16)....

உரையாடல் உள்ளாடலாக !

(லூக்கா 24 : 13-35) கத்தோலிக்கத் தாய்த் திரு அவையின் புதையல் நற்கருணை. நற்கருணையைச் சுற்றியே தான் நம் இருத்தலும் இயங்குதலும் நடைபெறுகின்றன. இந்த நற்கருணையின் மறைபொருளை உணர இன்றைய நற்செய்தி நமக்கொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. நமது திருப்பலியின் அமைப்பு முறையும் இன்றைய நற்செய்தியினைப் பார்த்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. முதல் பகுதி இன்றைய நற்செய்தியில் திருப்பலியின் இறைவார்த்தைப் பகுதியினை ஒத்து அமைகின்றது. இரண்டாம் பகுதி திருப்பலியின் நற்கருணைப் பகுதியினை ஒத்து அமைகின்றது. நற்கருணைப் பகிர்விற்கான தயாரிப்பே இறைவார்த்தைப் பகிர்வு. இறைவார்த்தைப் பகுதியின் நோக்கமே நற்கருணையின் மறைப்பொருளை உணரச் செய்வதே. வார்த்தையானவர் மனுவுரு எடுத்ததே நம்மோடு தங்குவதற்குத்தானே! ஆனால் பல வேளைகளில் நம்மில் பலர் நற்கருணையில் இறைவனைக் காண முடியாதவர்கள்தான், இன்று இறைவார்த்தையில் இறைவனைக் கண்டுவிடலாம் என்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறோம். பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டினை நோக்கி பயணம் செய்வதை விட்டுவிட்டு, பழைய ஏற்பாட்டிலேயே இன்னும் பல பிரிவினையன்பர்கள்...