Author: Jesus - My Great Master

உடனிருந்து செயலாற்றும் இறைவன்

திருத்தூதர் பணி 16: 11 – 15 இறைவன் நம்மிலிருந்து செயலாற்றுகிறார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு மிகச்சிறப்பாக உணர்த்துகிறது. ”இறைவன் முன் நாங்கள் பயனற்ற ஊழியா்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்கிற இறைவார்த்தைக்கு ஏற்ப, பவுலடியார் தனக்கு நடக்கிற இன்னல்களை, இடையூறுகளை நினைத்து கவலைப்படாமல், தன்னுடைய பணியை அவர் செய்து கொண்டேயிருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், கல்லைக்கூட கரைக்க முடியும் என்பது போல, கடினமான உள்ளத்தவரும், பவுலடியாரின் வார்த்தைகளைக் கேட்டு மனம் திருந்துகிற அளவிற்கு, தூய ஆவியானவர் அவரோடு உடனிருந்து செயலாற்றுகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் முயற்சிகளை எடுக்கிறபோது, அதற்கான பலனை நாம் உடனே பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி கிடைக்காதபோது, நாம் ஏமாற்றமடைகிறோம். அது தவறு. நம்முடைய கடமையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் கண்டிப்பாக நமக்குத் தருவார். எப்படிப்பட்ட கடினமான காரியம் என்றாலும், நாம் கடினமாக உழைக்கிறபோது, அதற்கான பலன் நமக்கு...

THE WORLD READS YOUR HEART

“Sanctify Christ as Lord in your hearts.” —1 Peter 3:15, RNAB Moments after I heard the above passage from the second reading proclaimed at Mass, the priest announced the Gospel reading, and everyone traced the sign of the cross on their hearts, as well as their foreheads and lips. Everyone at Mass was asking the Lord to sanctify their hearts to receive the Gospel and act upon it. When we have a sanctified heart to enthrone Christ as Lord (1 Pt 3:15), our lives cannot help but reflect the joy of the Lord regardless of our life’s circumstances. We will...

ஆண்டவரில் நாம் அகமகிழ்ந்தோம்

திருப்பாடல் 66: 1 – 3, 4 – 5, 6 – 7, 16, 20 இது ஒரு நன்றியின் திருப்பாடல் மட்டுமல்ல, கடவுளையும், அவரது மகிமையையும் போற்றிப்புகழக்கூடிய பாடலும் கூட. இது குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதப்பட்ட பாடல அல்ல. பொதுவாக, கடவுளைப் போற்றுவதற்காக எழுதப்பட்ட பாடல். திருப்பாடல் ஆசிரியர், கடவுளது மேன்மையை உணர்ந்தவராக, தன்னுடைய உள்ளத்தின் நிறைவை இங்கே வார்த்தையாக வடிக்கின்றார். கடவுள் தன்னுடைய படைப்பின் தொடக்கத்திலும், இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய இடங்களிலெல்லாம் தன்னுடைய மாட்சிமையை வெளிப்படுத்திய தருணங்களையும் வியந்து பார்க்கிறார். இந்த திருப்பாடலின் முக்கியமான செய்தியாக, கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வார் என்று சொல்கிறார். கடவுள் யாருக்குச் சொந்தமானவர் என்று ஒரு யூதரிடத்தில் கேட்டால், தங்களுக்கு மட்டுமே என்று பதில் சொல்வார். ஆனால், இந்த திருப்பாடலில், சற்று வித்தியாசமான பதில் நமக்குத் தரப்படுகிறது. கடவுள் யாருக்குச் சொந்தமானவர்? கடவுள் யாருக்குப் பதில் கொடுப்பார்? என்று...

PENTECOST PROMISES AND EASTER COMMANDS

“Through all this, the congregations grew stronger in faith and daily increased in numbers.” —Acts 16:5 Could you say that through this Easter season that “the congregations grew stronger in faith and daily increased in numbers”? If we don’t see Jesus adding daily to the Church’s number (Acts 2:47), it’s not that His promises are not true but that we are not receiving them. Jesus said: “I — once I am lifted up from earth — will draw all men to Myself” (Jn 12:32). Jesus has been lifted up in His death, Resurrection, and Ascension; therefore, we should see people...

இறைவனுடைய திருவுளம்

திருத்தூதர் பணி 16: 1 – 10 இறைவன் நம்மை வழிநடத்துகிறார். தன்னுடைய வழிநடத்துதலை அவர் எப்படி மானிடர்க்கு வெளிப்படுத்துகிறார்? இன்றைய வாசகம் நமக்கு அருமையான ஒரு எடுத்துக்காட்டை தருகிறது. பவுல் கனவு காண்கிறார். அவருடைய கனவில், மாசிதோனியர் ஒருவர், அவர்களுக்கு வந்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார். அந்த கனவை இறைத்திருவுளமாக ஏற்று, பவுலடியார் அங்கு செல்வதற்கு ஆயத்தமாகிறார். கடவுளின் திருவுளத்திற்காக உண்மையான உள்ளத்தோடு ஏங்குகிறபோது, இறைவன் நமக்கு நிச்சயம் வெளிப்படுத்துவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை இந்த பகுதியில் உறுதிப்படுத்தப்படுகிறது. விவிலியத்தில் கடவுள் தன்னை நோக்கி மன்றாடுகிற தன்னுடைய பிளள்ளைகளுக்கு பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மோசேக்கு நெருப்புப்புதரில் தன்னை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வெளிப்படுத்தினார். யோசேப்புக்கு கனவின் வழியில் இறைத்திருவுளத்தை வெளிப்படுத்தினார். இப்படி உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரிடத்திலும் ஒற்றுமை இருப்பதையும் நாம் பார்க்கலாம். இவர்கள் அனைவருமே, கடவுளுடைய திருவுளத்தை அறிவதற்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்கள். அந்த ஏக்கம்...