Author: Jesus - My Great Master

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்

புனித பர்த்தலொமேயு திருவிழா யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...

ACCEPTING JESUS ON HIS TERMS

“For from Him and through Him and for Him all things are. To Him be glory forever. Amen.” —Romans 11:36 The most important question in life is: “Who do you say” Jesus is? (Mt 16:15) If we confess with our lips that Jesus is the Messiah, Lord, and Son of God (Mt 16:16; Rm 10:9) and if we live for Jesus and not for ourselves (2 Cor 5:15), we will be saved from death, self-deception, slavery, damnation, and hell, and we will be saved for freedom, purity, holiness, love, peace, joy, and eternal life. Moreover, when we accept the grace...

ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு

திருப்பாடல் 138: 1 – 2, 2 – 3, 6, 8 இந்த திருப்பாடல் 2 சாமுவேல் ஏழாவது அதிகாரத்தை நிறைவு செய்யக்கூடிய திருப்பாடல் என்று சொல்லலாம். சாமுவேல் புத்தகத்தில் கடவுள், தாவீது அரசரிடம் ஆலயம் கட்டுவது தொடர்பான விளக்கம் அங்கே தரப்படுகிறது. ”ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு” என்கிற இறைவார்த்தை, தாவீது அரசரின் வலிமையான ஆன்மீகத்தையும், கடவுள் மீது அவர் வைத்திருக்கிற ஆழமான நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது. இதில் என்ன ஆன்மீகம்? இதில் என்ன ஆழமான நம்பிக்கை? என்று நாம் கேட்கலாம். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தெய்வம் உண்டு என்கிற நம்பிக்கை கொண்டிருந்த காலச்சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த ஆசிரியர், கடவுளின் பேரன்பு மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறார். பல தெய்வங்கள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை நிறைந்த உலகத்தில், மற்ற தெய்வங்களைப் பற்றி பேசினால், அந்த தெய்வம் நம்மை தண்டித்து விடுமோ? என்று பயப்படுவது இயல்பு. அந்த பயம் இல்லாத...

HONOR ROLE

“They are fond of places of honor.” —Matthew 23:6 Our American society is “fond of places of honor.” We have honor rolls, radio and TV interviews, Halls of Fame, autograph sessions, awards banquets, and numerous other ways to honor others. While the Lord does call us to honor our parents (Dt 5:16; Sir 3:2ff) and all people (1 Pt 2:17), He is adamant that we do not seek honor for ourselves. “Let another praise you — not your own mouth; someone else — not your own lips” (Prv 27:2). Yet though we don’t praise ourselves directly, we are not to...

நாம் வாழும் வாழ்க்கை

இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை நாம் கேட்ட நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டுவிதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை. தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள்...