Author: Jesus - My Great Master

நமது வலிமையாகிய கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்

திருப்பாடல் 81: 2 – 3, 4 – 5, 9 – 10a கடவுளை வலிமையானவராக இந்த திருப்பாடல் சித்தரிக்கிறது. கடவுளின் வலிமையை புகழ்ந்து பாடுவதாகவும் இது அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்களின் பார்வையில் பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும், கடவுள் தான் வலிமையுள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் தான் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தவர். எகிப்தில் இருக்கிற தெய்வங்களையெல்லாம் தோற்கடித்து விட்டு, அவர்களுக்கு வெற்றி தேடித்தந்தவர். அந்த கடவுளிடம் உண்மையான விசுவாசம் உள்ளவர்களாக இருக்கும்படி, இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஒரு விளையாட்டு வீரரை எடுத்துக்கொண்டால், அவருக்கென்று பலம் இருக்கும், பலவீனமும் இருக்கும். அவருடைய பலம் தான், அவருடைய வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். அந்த பலத்தில் தான், அவர் களத்தில் போராடுகிறார். அந்த பலத்தில் தான், வெற்றிகளைக் குவிக்கிறார். இங்கே, கடவுளை இஸ்ரயேல் மக்களின் பலமாக, ஆசிரியர் குறிப்பிடுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களோடு இருக்கிறவரை, எவராலும் அவர்களை வீழ்த்திவிட முடியாது. அதேவேளையில், கடவுள்...

IT’S GOD’S FAULT

“Lord, are You not concerned that my sister has left me to do the household tasks all alone? Tell her to help me.” –Luke 10:40 St. Martha blamed Jesus, that is, God, for not telling Mary to help her. We also blame God for not stopping tragedies and for not doing what we want. Martha seemed close to blaming God again for not preventing the death of her brother Lazarus (Jn 11:21). However, she refrained from blaming God, started believing God (Jn 11:27), and saw the glory of God as her brother was raised from the dead and unbound by...

ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது

திருப்பாடல் 84: 2, 3, 4 – 5, 7a & 10 இறைவன் வசிக்கக்கூடிய ஆலயம் எத்துணை மகிமையானது என்பதை இந்த திருப்பாடல் விளக்குவதாக இருக்கிறது. ”அருமையானது” என்கிற பொருள், ஆலயத்தின் உயர்ந்த மண்டபங்களையும், சுரூப வேலைப்பாடுகளையும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. ஆலயத்தின் சிறப்புத்தோற்றத்தையும் குறிப்பதல்ல. இங்கே நாம் கவனிக்கக்கூடிய முக்கியமான ஒன்று, திருப்பாடல் ஆசிரியர் எருசலேம் தேவாலயத்தை மையமாக வைத்து இந்த பாடலை எழுதுகிறார். எருசலேம் தேவாலயம் பார்ப்பதற்கு அழகானது. பரவசம் தரக்கூடியது. அப்படியானால், ஆசிரியர் ஆலயத்தைப்பார்த்து, “அருமையானது“ என்று சொல்லக்கூடிய பிண்ணனி என்ன? என்பதை இப்போது பார்ப்போம். ஆலயம் என்பது ஆண்டவர் வாழக்கூடிய இல்லம். ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறபோது, நமக்கு எந்த கவலையும் எழுவது கிடையாது. ஒரு தாயின் மடி எப்படி நம்முடைய கவலைகளுக்கெல்லாம் சிறந்த மருந்தாக இருக்கிறதோ, அதேபோல இறைவனின் இல்லம் நம் அனைவருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. நம்முடைய கவலைகளைப் போக்கக்கூடிய இடமாகவும், கண்ணீரைத்துடைக்கக் கூடிய...

HALO

“Then the Israelites would see that the skin of Moses’ face was radiant; so he would again put the veil over his face until he went in to converse with the Lord.” –Exodus 34:35 Moses had a halo after talking to God. People had to wear sunglasses when they looked at him. You could get a tan just sitting in the same room with Moses. The man was a human lightning bug. When we talk to God, do we light up like Moses did? Does communion with the Lord have a visible effect on us? We may not glow, but...

நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்

திருப்பாடல் 99: 5, 6, 7, 9 கடவுளைப் போற்றுவதற்கும் மகிமைப்படுத்துவதற்கும் திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஏனென்றால் அவர் தூயவர் என்று ஆசிரியர் சொல்கிறார். இங்கே கடவுளுக்கு “தூய்மை“ என்கிற அடையாளம் கொடுக்கப்படுகிறது. தூயவர் என்பது அப்பழுக்கற்றவர் என்பதாக அர்த்தம் கொள்ளலாம். வெள்ளை மனம் உடையவர். புனிதத்தின் நிறைவாக ஆண்டவர் இருக்கிறார். எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும், இஸ்ரயேலின் கடவுளுக்கு நிகரான தூய்மை யாரிடமும் இல்லை என்பது இங்கு தரப்படுகிறது கூடுதல் செய்தி. தூய்மையின் உறைவிடமாக இருக்கிற இறைவனை நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது தான், நமக்கு கொடுக்கப்படுகிற சிந்தனையாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியிலும் இதே சிந்தனை தான் நமக்குத்தரப்படுகிறது. புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த புதையலை தனதாக்கிக் கொள்கிறார். விலையுயர்ந்த முத்தைக் காணக்கூடிய ஒருவர், தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். அதேபோல, தூய்மையின் ஆண்டவரை நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டும். அவர் தான் நாம் பெறுதற்கரிய சொத்து....