Author: Jesus - My Great Master

என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன

திருப்பாடல் 62: 5 – 6, 8 இந்த திருப்பாடல் செபமாகவோ, புகழ்ச்சிபாடலாகவோ இருக்கலாம். அது உறுதியாகத் தெரியவில்லை. எந்த சூழலில் எழுதப்பட்டது என்பதும் உறுதியாகவில்லை. சோகமான சூழலிலா? அல்லது மகிழ்ச்சியான வேளையா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை மட்டும் இங்கே அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. ”எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்” என்று, ஆசிரியர் விடுக்கிற அழைப்பு இதனை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுளின் அருளும், வல்லமையும் நம் வாழ்வில் வெளிப்பட நாம் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் திருப்பாடல் ஆசிரியர். நாம் எதிர்பார்க்கிற நேரத்தில் கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்ள முடியாது. மாறாக, கடவுள் விரும்புகிற நேரத்தில், அதிலும் சிறப்பாக நமக்குத் தேவையான நேரத்தில் கடவுளின் வல்லமை வெளிப்படும். இதுதான் கடவுள் மட்டில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கையிலிருந்து நாம் சிறிதும் அடிபிறழக்கூடாது. அந்த நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும். அதுதான் ஆசிரியர்...

JESUS AND FEAR

“Say to those whose hearts are frightened: Be strong, fear not!” —Isaiah 35:4 When you see a frightened child, your heart goes out to him or her with compassion. This is a shadow of our heavenly Father’s love poured out on those struggling and fearful. “The Lord is close to the brokenhearted; and those who are crushed in spirit He saves” (Ps 34:19). He wants to free you from the slavery of fear (Heb 2:14-15) and give you a peace beyond understanding (Phil 4:7). “Is it possible that He Who did not spare His own Son but handed Him over...

நன்றாக யாவற்றையும் செய்கிறார்

காது கேளாதவரின் நிலைமை உண்மையிலேயே, மிக மிக கடினமானது. அவர்களின் நிலையும் தர்மசங்கடமானது. யாராவது அவர்களைப்பற்றிப் பேசினாலும், சிரித்தாலும், அவர்களைப்பற்றிப் பேசுவது போலவும், அவர்களைப்பரிகசிப்பது போலவும் தான் இருக்கும். அப்படிப்பட்டச் சூழ்நிலையில்தான் இந்த மனிதனும் இருந்திருக்க வேண்டும். கண் இல்லையென்றால் கூட, தங்களை யார் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கும். ஆனால், தங்களைப்பற்றிப்பேசுவதை உணர்ந்தாலும், பதில் சொல்ல முடியாத நிலைமை உண்மையிலேயே பரிதாபமானது. இயேசு அந்த மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்கிறார். அவன் வாழ்வில்பட்ட வலிகளை இயேசு நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான், அவனைத் தனியே அவர் அழைத்துச்செல்கிறார். அவனை ஒரு நோயாளியாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. அவனை ஒரு மனிதனாக, உணர்வுள்ளவனாகப் பார்க்கிறார். இயேசுவின் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சி, அவரை மக்கள் மத்தியில் ”நன்றாக யாவற்றையும் செய்கிறவராகக்” காட்டுகிறது. இயேசு நல்லது செய்ய வந்தார் என்பதைவிடு, நல்லதை மீட்க வந்தார் என்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், தொடக்கத்தில் கடவுள் இந்த...

HATRED

“You nourished hostility in your hearts because of your evil deeds.” —Colossians 1:21 Very few people admit they have hatred in their hearts. Even fewer admit they actually nourish hatred. Hatred is widespread, even epidemic, yet we refuse to admit our hatred. Only in Jesus can the barrier of hostility be broken down (Eph 2:14). It’s natural for us to be angry and unforgiving and resentful. “To err is human, to forgive divine,” and we’re not divine. We can never love one another by “human good will,” but only in Christ and by His power. Let’s admit we can’t save...

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்

திருப்பாடல் 54: 1 – 2, 4, 6 இந்த திருப்பாடல், 1சாமுவேல் 23: 19, 26: 1 ல், ”சீபியர் கிபாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில், ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான்” என்கிற செய்தியை வெளிப்படுத்துவதாக அமைகிறது. தாவீதை, சவுல் அரசரிடம் காட்டிக்கொடுக்கக்கூடிய நிகழ்வு இங்கே குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட வேதனையான நேரத்தில் ஆசிரியர் இந்த பாடலை எழுதுகிறார். ஆனால், அவரின் வார்த்தைகளிலிருந்து, இந்த துன்பத்திலிருந்து அவர் தப்பிவிட்ட உணர்வு வெளிப்படுகிறது. தன்னுடைய எதிரிகளைப்பற்றி இறைவனிடம் முறையிடுகிறார். தன்னுடைய எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கிறார். இந்த திருப்பாடலில் தாவீது ஆசிரியர் கடவுள் மீது வைத்திருக்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தன்னுடைய ஆற்றலின் மீதோ, தன்னுடைய நண்பர்கள் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்றோ அவர் நினைக்கவில்லை. ஆண்டவர் மட்டும் தான், தன்னை இக்கட்டிலிருந்து முழுமையாகக் காப்பாற்ற...