Author: Jesus - My Great Master

ஞானத்தைத் தேடுவோம்

சாலமோனின் ஞானம் 7: 7 – 11 இறைவனைத் தேடுவோரின் வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வலியுறுத்திச் சொல்வது தான், இன்றைய வாசகம். இந்த உலகத்தில் வாழ்கிற நாம், எப்போதும் செல்வத்தைத் தேடுகிறோம். செல்வம் தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்று நம்புகிறோம். பணம் இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்பது நமது எண்ணம். அதைத்தான் இந்த உலகமும் கற்றுக் கொடுக்கிறது. செல்வம் இல்லையென்றால், இந்த உலகத்தில் மனிதர்களுக்கு மதிப்பு இல்லை. எனவே, மதிப்பிற்காக, ஆடம்பரத்திற்காக, அதில் தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு செல்வதைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். உண்மையில், செல்வம் நமக்கு நிறைவைத் தருவதில்லை. இந்த உண்மையை, எத்தனையோ செல்வந்தர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தாலும், அதனை நேரடியாக உணர்ந்தால் அன்றி, அனுபவித்தால் அன்றி, அந்த உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. சாலமோன் அரசர் ஞானத்தின் பெருமையை இந்த வாசகத்தில் உணர்த்துகிறார். அவர் கடவுளிடம் செல்வத்தைக்...

“DECIDE TODAY” (JOS 24:15)

“Crowd upon crowd in the valley of decision; for near is the day of the Lord in the valley of decision.” –Joel 4:14 In today’s first Mass reading, God invites the nations to gather in the valley of decision. He tells the nations, in effect: “Bring up your weapons of war; I want to see all your military might” (see Jl 4:9). The nations think they will be fighting; in reality, they are gathering to be judged. In the valley of decision, the angels apply the sickle to the harvest at the end of time. There is to be a...

அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன

திருப்பாடல் 97: 1 – 2, 5 – 6, 11 – 12 இந்த உலகத்தில் இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிளவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை சமூகத்தீமையாக கருதப்பட்டாலும், மக்களை ஆளும் அரசுகள் இதை அரசியலாக்கி தங்களது நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கடவுள் முன்னிலையில் அனைவரும் அவருடைய பிள்ளைகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது தான் இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை. சாதிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சுயநலத்திற்காகவும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவும் ஒரு தந்திர நரி குணம் கொண்டவர்களால் புகுத்தப்பட்டது. கடவுள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்களே. நாம் வழிபடும் இறைவனும், நாம் சார்ந்திருக்கும் சமயங்களும் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையைத் தருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை இன்னும் தரங்கெட்டவர்களாக மாற்றக்கூடாது. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் முன்னிலையில் “நாம் “அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நமக்குள்ளாக வர வேண்டும்....

FULL HOUSE

“Next it goes out and returns with seven other spirits far worse than itself, who enter in and dwell there. The result is that the last state of the man is worse than the first.” –Luke 11:26 “No man can serve two masters” (Mt 6:24); there’s only room for one. That’s what Jesus refers to in today’s Gospel passage. We cannot be double-minded (see Jas 3:9ff). It’s important to empty ourselves of ungodly things and desires, but once that emptying is done, there is a vacuum, a void. Something will fill that void — either godly desires or ungodly ones....

வேற்றினத்தாரைக் கண்டித்தீர், பொல்லாரை அழித்தீர்

திருப்பாடல் 9: 1 – 2, 5, 15, 1b – 8 கடவுள் அனைவருக்குமான கடவுள். எந்த பாரபட்சமும் காட்டாதவர். எல்லாருக்கும் நடுநிலையில் இருந்து நீதி வழங்குகிறவர். தவறு செய்கிற அனைவரையும் கண்டிக்கிறார், தண்டிக்கிறார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் செய்தி. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார். அவர்கள் வழியாக இந்த உலக மக்களை மீட்டெடுக்க முடியும் என்று கடவுள் நம்பினார். அந்த நம்பிக்கையில் தான், இறைவாக்கினர் வழியாக அவர்களோடு பேசினார். அவர்களை வழிநடத்தினார். தான் அவர்களுக்காக முன்குறித்து வைத்திருந்த மீட்புத்திட்டத்திற்கு அவர்களை தயாரித்தார். இறைவனின் மீட்புத்திட்டத்தை முழுமையாக உணராத மக்கள் கடவுளுக்கு எதிராக புறக்கணித்துச் சென்றபோது, அவர்களை தண்டித்து திருத்துவதற்கு கடவுள் தயங்கவில்லை. வேற்றினத்தாரையும் கடவுள் அன்பு செய்தார். ஏனெனில் அவர்களும் கடவுளின் படைப்புக்கள் தான். அவர்களுக்கும் கடவுள் தந்தை தான். அவர்களை மீட்டெடுப்பதற்குத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். நீதியோடு,...