Author: Jesus - My Great Master

ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு !

இன்று குருத்து ஞாயிறு என்று நாம் சொல்லிக்கொண்டாலும், திருவழிபாட்டு முறைமைப்படி இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க இருக்கிறோம். இந்த வாரம் முழுவதுமே நமது சிந்தனைக்காக இயேசுவின் தற்கையளிப்பை எடுத்துக்கொள்வோம். பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே. மனித ஆளுமையை நாம் ஐந்து கூறுகள் கொண்டதாக வகைப்படுத்தலாம். அவை: 1. உடல் 2. மனம் 3. ஆன்மா 4. உணர்வுகள் 5. உயிராற்றல். இந்த ஐந்தினையும் நாம் இறைவன்பால் எழுப்புகின்றபோதுதான், நமது செபம், இறையொன்றிப்பு, அல்லது அர்ப்பணம் முழுமையாகும். இந்த வாரம் முழுவதும் இயேசு இந்த ஐந்து நிலைகளிலும் எவ்வாறு தன்னை முழுமையாகத் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார் என்று சிந்திப்போம். இயேசு தன் உடலை ஒப்புக்கொடுத்தார்: நம்மை அடையாளப்படுத்தும்...

RATTLING BONES

“He prophesied that Jesus would die for the nation – and not for this nation only, but to gather into one all the dispersed children of God.” –John 11:51-52 Ezekiel prophesied that the chosen people were a field of dry bones (Ez 37:1-2). They had been dead for centuries. Then he prophesied restoration, unity, and peace (Ez 37:21ff). How can dry bones be restored? By nothing other than resurrection of the dead. How can we be restored to unity and peace? By nothing less than resurrection. We’ve tried to improve the human condition with education, law and order, communism, capitalism,...

பலருக்காக ஒருவர்

யோவான் 11: 45-57 நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே. எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல்...

DOWN BY THE RIVERSIDE

“In that place, many came to believe in Him.” –John 10:42 In the temple, at Solomon’s Portico, Jesus was rejected. Many people reached for rocks to stone Him (Jn 10:31). They also tried to arrest Him (Jn 10:39). Jesus “eluded their grasp” and “went back across the Jordan to the place where John had been baptizing earlier” (Jn 10:39-40). “In that place, many came to believe in Him” (Jn 10:42). Why was Jesus not accepted in the holy place, the temple, but believed in “down by the riverside”? It was because St. John the Baptizer had been administering his baptism...

கடவுள் எங்கோ இல்லை

யோவான் 10.31-42 பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள். இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று கடவுளுக்கு வரையறைக் கொடுத்தார்கள்....