கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம் தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் ஆண்டவரை தேடுவதால் நமக்கு அவர் உண்டு பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதங்கள் அநேகமாய் இருக்கும். அவரை கடவுளாக கண்டுக்கொண்ட நாம் பேறுபெற்றவர்கள். ஏனெனில் நம்மை அவர் தமது உரிமை சொத்தாக தெரிந்தெடுத்துள்ளார். அவர் வானில் இருந்தாலும் அங்கே இருந்து நம்மை காண்கிறார். அவரின் சிங்காசனத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்கிக் கொண்டுத்தான் இருக்கிறார். நம் உள்ளங்களை உருவாக்கியவரும்,நமது செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே. ஆகையால் தான் இவ்வாறு சொல்கிறார். சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.சங்கீதம் [திருப்பாடல்கள் 34:10 ல் வாசிக்கிறோம். நாம் யோனா புத்தகத்தை வாசித்து பார்ப்போமானால் ஆண்டவரின் அன்பையும், அவரின் பேரன்பையும், இரக்கத்தையும், மனஉறுக்கத்தையும் காணலாம். கடவுள் நம்மை சில வேளைகளில் கடினமான பாதையில் வழிநடத்தினாலும் அதில் நன்மையே உண்டாகும். அவர் தீர்ப்பு வழங்குவது பழிவாங்குவதற்கு அல்லவே அல்ல. தமது மக்களை திருத்துவதற்கே. நினிவே மக்கள் பாவம்...
Like this:
Like Loading...