நம்முடைய துன்ப வேளைகளில் நமக்கு உற்ற துணையாக இருந்து அடைக்கலமும்,ஆற்றலையும்,தந்து நம்மை பாதுகாத்து நம் தேவைகள் யாவையும் சந்திக்கும் கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் மனம் கலங்க தேவையேயில்லை. இந்த நிலவுலகம் நிலை குலைந்தாலும்,மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவை பெருக்கெடுத்து வருவதால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில், கடவுள் நமக்கு அரணும்,கோட்டையும்,நமது நம்பிக்கையாயும் இருக்கிறார். அவரின் செயலை காணுங்கள்,அவர் இந்த உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். ஆகையால் உங்கள் கவலைகளை மறந்து துயரங்களை தூக்கி எறிந்து, அவரே கடவுள் என்று உணர்ந்து ஆண்டவரின் மாட்சிமையை போற்றுங்கள். ஒரு குழந்தை தனது தாயிடம் கேட்பதை அந்த தாய் மறுப்பதே இல்லை. அதைப்போல் தாயைவிட மேலான அன்பு காண்பிக்கும் நமது ஆண்டவர் நாம் கேட்பதை மறுப்பதே இல்லை. விண்ணப்பத்தை கேட்பவர் உங்களோடு இருக்கிறார், உங்கள் கண்ணீரை காண்கிறார். உங்களை ஆற்றி, தேற்றி, மகிழச்செய்கிறார். அவரே அனைத்துலகின் வேந்தர்: அவருக்கே நாம் அருட்பா தொடுத்து புகழ் பாடுவோம். நமது...
Like this:
Like Loading...