இன்றைய சிந்தனை: ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும்,வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவார்.பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்கள்;பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பார். ஆனால், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்:ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவார்கள்.அது நீரோடையை நோக்கி வேர்விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை.அதன் இலைகள் பசுமையாய் இருக்கும் வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது; அது எப்போதும் கனி கொடுக்கும். ஒருநாள் ஒரு சிறு பையன் ஆலயத்தில் போதகர் சொன்ன வசனத்தைக் கேட்டுக்கொண்டு இருந்தான்.அன்று அவர் மத்தேயு 17:27 ல் உள்ள வசனத்தை விளக்கிக் கொண்டு இருந்தார்.அதைக்கேட்ட அவனுக்குள் ஆண்டவர் பேரில் நம்பிக்கை அதிகமாகியது.இயேசு பேதுருவிடம் நீ கடலுக்கு போய் தூண்டில் போட்டு முதலில் அகப்படும் மீனின் வாயை திறந்துப்பார். அதில் என் சார்பாகவும்,உன் சார்பாகவும், செலுத்த வேண்டிய நாணயத்தை காண்பாய்.அதை கொடுத்து நீ வரியை செலுத்துவிடு என்று சொல்கிறார். இதை போதகர் சொன்னதைக் கேட்டு...
Like this:
Like Loading...