இன்றைய சிந்தனை பேரன்புமிக்கவரும்,நம்பிக்கைக்குரியவரும் ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவரும், செய்தவரும், நம்முடைய கொடுமையையும், குற்றத்தையும், பாவத்தையும், மன்னிப்பவரும் அன்பே உருவான ஆண்டவரின் நாமத்தை போற்றி துதித்து, அவருக்கு மகிமையை செலுத்தவே நம்மை அழைத்து அறிந்திருக்கிறார். அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இரக்கத்தையும், பரிவும் வழங்கி நாம் எண்ணுவதற்கும், நினைப்பதற்கும்,மேலாக கொடுத்து ஒவ்வொரு நாளும் ஆசீர்வதித்து காத்து வழிநடத்தி வருகிறார். பொய் சொல்வதற்கு கடவுள் மனிதன் அல்லர். மனத்தை மாற்றிக்கொள்வதற்கு அவர் ஒரு மனிதப் பிறவியும் அல்லர். அவர் சொல்லியதை செய்யாமல் இருப்பாரோ? அல்லது அவர் உரைத்ததை நிறைவேற்றாமல் இருப்பாரோ? அவருக்கு விரோதமான மந்திரமும் இல்லை, அவருக்கு எதிரான குறி சொல்லுதலும் இல்லை. அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பதே அவருக்கு மிகவும் பிரியமான காரியமாகும். ஆபிரகாமுக்கு வாக்களித்த இறைவன் அதை அவருக்கு நிறைவேற்றி கொடுத்தார். உன் சந்திதியில் ராஜாக்களும், பிரபுக்களும் தோன்றும்படி செய்வேன் என்று வாக்களித்த இறைவன் அவரின் முதிர்ந்த வயதில் அவருக்கு ஒரு குழந்தையை கொடுத்து கடவுள் சொல்லிய யாவற்றையும் நிறைவேற்றி கொடுத்தார். அவரின் இரக்கமும், பரிவும் என்றும் மாறாதது. செங்கடலை பிளந்து இஸ்ரயேல் ஜனங்களை...
Like this:
Like Loading...