பிரியமானவர்களே!! இதோ நம்முடைய ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் இவ்வாறே அழைக்கின்றார்.தாகமாய் இருப்பவர்களே,நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்.கையில் பணமில்லாதவர்களே,நீங்களும் வாருங்கள்.தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,வாருங்கள்,காசு பணமின்றித் திராட்சை ரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தை செலவிடுகின்றீர்கள்?நிறைவு தராத ஒன்றிற்காக ஏன் உங்கள் உழைப்பை வீனாக்குகிரீர்கள்?உங்கள் ஆண்டவருக்கு செவிகொடுங்கள்.நல்லுணவை உண்ணுங்கள்;கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.ஏசாயா 55 : 1, 2 , நம்முடைய ஆண்டவர் எத்துனை கருணை மிக்கவர் என்பதை நாம் சமயத்தில் மறந்து புலம்பி தவிக்கிறோம்.நாம் மறந்தாலும் அவர் நம்மை ஒருபோதும் மறக்கவே மாட்டார்.ஏனெனில் நம்முடைய எண்ணங்கள் வேறே,அவருடைய எண்ணங்கள் வேறே,நம்முடைய வழிமுறைகள் வேறே,அவருடைய வழிமுறைகள் வேறே.மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிகவும் உயர்ந்து இருப்பது போல நம்முடைய சிறிய எண்ணங்களைவிட ஆண்டவரின் எண்ணங்கள் மிகவும் உயர்ந்து இருக்கின்றன. எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது.ஒரு மனிதர் வெளியூர் செல்ல நினைத்து அங்குள்ள உறவினர்களுக்கு தன்னுடைய தோட்டத்தில் விளைந்த நல்ல காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக்கொண்டு...
Like this:
Like Loading...