காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகிறார். ஏசாயா 50 : 4
ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றது! அவரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!. அவரையே நம்முடைய பங்காக கொண்டு அனுதினமும் செயல்படுவோமானால் நம் நிழலாக இருந்து நம்மை காத்துக்கொள்வார். காலைதோறும் தேடுவோருக்கு அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்! ஏனெனில் அவர் கட்டளையிடாமல் யார் தாம் சொல்லியதை நிறைவேற்றக்கூடும்? ஆண்டவர் நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். நாம் அமர்வதையும், எழுவதையும் அறிந்திருக்கிறார். நம்முடைய எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் அவருக்குத் தெரியும். நாம் நடந்தாலும், படுத்திருந்தாலும் நம்முடைய வாயில் வார்த்தைகள் உருவாகும் முன்பே முற்றிலும் அவர் அறிந்திருக்கிறார். நம்மேல் அவர் வைத்துள்ள அறிவை நாம் அறியமுடியுமோ? அது நமக்கு வியப்பானது அல்லவோ! அவருக்கு மறைவாக எங்கேயாவது நாம் போகமுடியுமா? விண்ணையும், மண்ணையும், காற்றையும், கடலையும், மண்ணான மனிதர்களாகிய நம்மையும் படைத்தவர் அவர் அல்லவா!! நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நாம் பெற்றிட ஆண்டவர் நமக்கு கற்றோரின் நாவைக் கொடுக்கிறார். அதற்காகவே காலைதோறும் நம்மை தட்டி எழுப்புகிறார். கற்போர் கேட்பதுபோல நாமும் காலைதோறும் அவரின் வார்த்தைகளை வாசித்து...

