1000 துதி மாலை(501-600)
1000 துதி மாலை (Praises) <501-600>
| வ. எண் | துதி மாலை | வசனங்கள் |
| 501 | சிறைப்பட்ட உம் மக்களை புறக்கணியாதவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.69:33 |
| 502 | சிறப்பட்டோரின் புலம்பலுக்கு செவி சாய்ப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:20 |
| 503 | சிறப்பட்டோரினை விடுதலை வாழ்வுக்கு அழைத்து செல்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.68:6 |
| 504 | தனித்திருப் போருக்கு உறைவிடம் அமைத்து தரும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:6 |
| 505 | திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:5 |
| 506 | கணவனை இழந்தாளின் காப்பாளராய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:5 |
| 507 | சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடு விப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:20 |
| 508 | திருத்தூயத்தில் உறையும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:5 |
| 509 | தடுக்கிவிலும் யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:14 |
| 510 | தாழ்த்தப்பட்ட யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.145:14 |
| 511 | உடைந்த உள்ளத் தோரை குணப்படுத்துகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:3 |
| 512 | உடைந்த உள்ளத் தோரின் காயங்களைத் கட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 147:3 |
| 513 | ஏழைகளை தூசியிலிருந்து தூக்கி நிருத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 113:7 |
| 514 | வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கை தூக்கிவிடுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா113:7 |
| 515 | ஒடுக்கப்பட்டோர்க்கு அடைக்கலமான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.9:9 |
| 516 | எங்கள் நெருக்கடி வேளையில் புகளிடமானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.9:9 |
| 517 | எளியோரின் நம்பிக்கை எப்போதும் வீண்போகாமல் காப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.9:18 |
| 518 | ஏழைகளின் நீதிக்காக வழக்காடும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா140:12 |
| 519 | எளியோருக்கு நீதி வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா140:12 |
| 520 | எளியோரையும் வலியோரின் கையினின்று விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 35:10 |
| 521 | எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப் போரின் கையினின்று விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.35:10 |
| 522 | எளியோர் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பேற்றோர் துன்பநாளில் ஆண்டவர் அவனை விடு விப்பார் பாதுகாப்பார் நெடுங்காலம் வாழவைப்பார் படுக்கையில் நோயுற்று கிடக்கையில் துணை செய்து நோய் நீங்கி படுக்கையில் இருந்து எழும்படி செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா. 41:1.3 |
| 523 | எளியோருக்கு மீட்பளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:27 |
| 524 | என் விளக்கிற்கு ஒளியேற்றுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:28 |
| 525 | என் இருளை ஒளியாக மாற்றுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:28 |
| 526 | ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் உரிமைகள் வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:6 |
| 527 | வலியோரை எதிர்க்க வலிமையற்ற வரைக் காக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 2குறி.14:11 |
| 528 | எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெரு மூச்சையும் கேட்டு எழுந்து வந்து அவர்களை பாதுகாப்பில் வைப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.12:5 |
| 529 | ஏழைகளின் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.69:33 |
| 530 | எளியோரை அவர் துன்பத்திலிருந்து விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.107:41 |
| 531 | எளியோரின் குடும்பங்களை மந்தையைப் போல் பெருகச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.107:41 |
| 532 | வறியோரின் வலப்பக்கம் நின்று தண்டனை தீர்ப்பிடு வோரிடமிருந்து அவர்களது உயிரைக்காப்பவரே | தி.பா.109:31 |
| 533 | வறியவரை உயிக்குடி மக்களிடையே அமரச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.113:8 |
| 534 | அனாதைகளுக்கு துணை நீரே ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 10:14 |
| 535 | திக்கற்றவர்களின் மன்றாட்டை அவமதியாமல் அவர்கள் வேண்டுதலுக்கு செவி கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:17 |
| 536 | அனாதை பிள்ளைகளையும் கைம் பெண்களையும் ஆதரிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா146:9 |
| 537 | ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:10 |
| 538 | ஆண்டவர் தம் அடியோர்க்கு இரக்கம் காட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.135:14 |
| 539 | உம் அடியோரின் நல் வாழ்க்கைக்கான விரும்புவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 35:27 |
| 540 | உம் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.44;26 |
| 541 | உம் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.44:26 |
| 542 | காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா104:4 |
| 543 | தீப்பிழம்புகளை உம் பணியாளரை கொண்டுள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.104:4 |
| 544 | தம் ஊழியரின் உயிரை மீட்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:22 |
| 545 | உமது முகத்தின் ஒளி உம் அடியான் மீது வீசும்படி செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.31:16 |
| 546 | தாம் உவகை கொள்ளும் நடத்தை கொண்ட மனிதரின் காலடிகளை உறுதிப்படுத்தும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா37:23 |
| 547 | நல்ல மனிதன் விழுந்தாலும் விழுந்து கிடைக்காமல் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்தும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:24 |
| 548 | நேரிய உள்ளத்தோரை விடுவிக்கும் என் கேடயமே உம்மை துதிக்கிறோம் | தி.பா.7:10 |
| 549 | நல்லாரின் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிந்து நீதி அருளும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.7:9 |
| 550 | நீதிமானையும் பொல்லாரையும் சோதித்தறிகிறவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.11:5 |
| 551 | நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்ற கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா14:5 |
| 552 | நீதிமான்கள் மன்றாடும் போது செவி சாய்க்கின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:17 |
| 553 | நீதிமான்களின் அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:17 |
| 554 | நேர்மையானவருக்கு நேரிடும் துன்பங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:17 |
| 555 | நேர்மையாளரின் எலும்புகள் எல்லாம் அவற்றுள் ஒன்றும் முறிபடாத பாது காக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா34:20 |
| 556 | நேர்மையாளர் கை விடப்பட்டதில்லை அவர்களுடைய வழிமரபினர் பிச்சை எடுப்பதைப் பார்த்ததில்லை அதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:25 |
| 557 | நேர்மையாளரைத் தாங்கிடும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:17 |
| 558 | நேர்மையாளரை ஒருப்போதும் வீழ்சியுறவிடாத உம்மை துதிக்கிறோம் | தி.பா 55:22 |
| 559 | நேர்மையாளரை பேரீச்சை மரமென செளித் தோங்கச்செய்து லெபனோனின் கேதுருமரமென தழைத்து வளரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.92:12 |
| 560 | நீதிமானிடம் அன்பு கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:8 |
| 561 | நேர்மையாளர் முதிர்வயதிலும் கணிதருவர் என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பார்கள் என்றவரே | தி.பா.92:14 |
| 562 | நல்லவரோடு என்றும் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 2குறி.19:11 |
| 563 | நீதிமான்களின் வாழ்நாட்களை அறிந்திருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:18 |
| 564 | மாசற்றவராய் நடப்பவருக்கு நன்மையானவற்றை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.84:11 |
| 565 | எளியோருக்கு ஆதரவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:6 |
| 566 | தாழ் நிலையில் உள்ள தம்மக்களுக்கு வெற்றியளித்து மேன்மைபடுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 149:4 |
| 567 | எளியோரை நேரிய வழியில் நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.25:9 |
| 568 | பாவிகளுக்கு நல் வழியைக் கற்பிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.25:8 |
| 569 | உமக்கு அஞ்சிநடப்போர்க்கு தமது உடன் படிக்கையை வெளிப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா25:14 |
| 570 | நேர்மையாளரைக் கைவிடாமல் அவர்களை என்றும் பாதுகாப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா37:28 |
| 571 | தம் பற்றுமிகு அடியோர்க்கு நிறை வாழ்வை வாக்களிக்கின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.85:8 |
| 572 | தூயவர் குழுவில் அஞ்சுதற்குரிய இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.89:7 |
| 573 | உண்மையால் சூழப்பட்ட ஆற்றல் மிக்க ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.89:8 |
| 574 | சூழ்ந்து நிற்கும் செராபீன்களால் தூயவர்! தூயவர்! என போற்றப்படும் இறைவனே உம்மை துதிக்கிறோம் | ஏசா.6:3 |
| 575 | என்னைத் தலை நிமிரச் செய்யும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.3:3 |
| 576 | புது எண்ணெய் என்மேல் பொழிந்து காட்டெருமைக்கு நிகரான வலிமை எனக்கு அளித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.92:10 |
| 577 | உயர்ந்த இடத்தில் என்னை நிலைநிறுத்துகிறவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா18:33 |
| 578 | எனக்கு ஆதரவு ஆனவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா3:5 |
| 579 | நான் தனிமையாய் இருந்தாலும் என்னை பாதுகாப்புடன் வாழச் செய்கின்றவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா4:8 |
| 580 | என் செவிகள் திறக்கும்படி செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:6 |
| 581 | என் கொஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.28:6 |
| 582 | என் அழுகுரலுக்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.6:8 |
| 583 | உமது தோற்பையில் எனது கண்ணீரை சேர்த்துவைத்துள்ளிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.56:8 |
| 584 | என் கண்கள் கலங்காதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.116:8 |
| 585 | என் கால் இடராதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.116:8 |
| 586 | என் காலடிகளை உறுதிப்படுத்தினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:2 |
| 587 | அழிவின் குழியிலிருந்து என்னை வெளிக் கொணர்ந்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா40:2 |
| 588 | சேறு நிறைந்த பள்ளத்திலிருந்து என்னை தூக்கி எடுத்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:2 |
| 589 | என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பரே உம்மை துதிக்கிறோம் | தி.பா27:15 |
| 590 | என் கால்களை மான்கால்கள் போலாக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா18:33 |
| 591 | என் கால்கள் தடுமாறாதபடி நான் நடக்கும் வழியை அகலமாக்கினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:36 |
| 592 | நேருக்கடியற்ற இடத்திற்கு என்னைக் கொண்டுவந்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:19 |
| 593 | என் எதிரியின் கையில் என்னை விட்டுவிடாமல் அகன்ற இடத்தில் என்னை காலூன்றி நிற்க வைத்தீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:8 |
| 594 | எல்லா இன்னல்களிலிருந்தும் என்னை விடுவித்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா54:7 |
| 595 | கொடுமையிலிருந்து என்னை விடுவிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 2 சாமு.22:3 |
| 596 | அரண் சூழ் நகரினுள் என்னை இட்டுச்செல்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா60:9 |
| 597 | போருக்கு என்னைப் பழக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:34 |
| 598 | போரிட என் கைகளுக்கு பயிற்சி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 144:1 |
| 599 | எங்களுக்கு நடை பயிற்றுவித்த ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஒ.சே11:3 |
| 600 | போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா140:7 |

