1000 ஸ்தோத்திரங்கள் 801 – 900
801. உம் வசனத்தை நம்பச் செய்தீரே ஸ்தோத்திரம்
802. உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம்
803. உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் (நடத்துகிறீர், நடத்துவீர்) ஸ்தோத்திரம்
804. உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம்
805. உம்முடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளதாக்குகிறதற்காக ஸ்தோத்திரம்
806. மிகவும் புடமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம்
807. உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
808. உம்முடைய வார்த்தை உத்தமமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
809. உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம்
810. நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் (செய்கிறீர், செய்வீர்) ஸ்தோத்திரம்
811. நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம்
812. உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே ஸ்தோத்திரம்
813. உம்முடைய தயவோ நீடிய வாழ்வு ஸ்தோத்திரம்
814. எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே ஸ்தோத்திரம்
815. என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம்
உமது கிரியைகள் அதிசயமானவைகள், ஸ்தோத்தரிக்கிறோம் ஆண்டவரே!
816. எகிப்தியரின் தலைச்சன்களை சங்கரித்தீர் ஸ்தோத்திரம்
817. கடலை உலர்ந்த தரையாக மாற்றினீர் ஸ்தோத்திரம்
818. சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலையை உடைத்தீர் ஸ்தோத்திரம்
819. தேவரீர் முதலைகளின் தலையை நருக்கிப் போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
820. ஊற்றையும் ஆற்றையும் பிளந்தீர் ஸ்தோத்திரம்
821. மகாநதிகளை வற்றிப் போகப் பண்ணினீர் ஸ்தோத்திரம்
822. ஆற்றை கால்நடையாய் கடக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்
823. பகலிலே மேகத்தினாலும் இரவிலே அக்கினி வெளிச்சத்தினாலும் ஜனத்தை வனாந்தரத்திலே நடத்தினீர் ஸ்தோத்திரம்
824. கன்மலையைப் பிளந்து தண்ணீரை குடிக்கக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
825. மாராவின் தண்ணீரை மதுரமாக்கினீர் ஸ்தோத்திரம்
826. தூதர்களின் அப்பமாகிய மன்னாவைக் கொடுத்தீர் ஸ்தோத்திரம்
827. பார்வோனையும் அவன் சேனையையும் சிவந்த சமுத்திரத்திலே கவிழ்த்துப்போட்டீரே ஸ்தோத்திரம்
828. எரிகோவின் கோட்டையை வீழ்த்தினீர் ஸ்தோத்திரம்.
829. பெரிய ராஜாக்களையும் பிரபலமான ராஜாக்களையும் சங்கரித்தீர் ஸ்தோத்திரம்.
830. கழுதையின் வாயைத் திறந்தீர் ஸ்தோத்திரம்.
831. சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் மேலும் தரித்து நிற்கச் செய்தவரே ஸ்தோத்திரம்.
832. குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
833. நீருற்றுகளை வறண்ட ஸ்தலமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
834. குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் ஆறுகளை அவாந்திரவெளியாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
835. அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
836. கனமலையைத் தண்ணீர்த் தடாகமாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்.
837. கற்பாறையை நீரூற்றாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
838. வறண்ட நிலத்தை நீருற்றுகளாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
839. மலடியை சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்குபவரே ஸ்தோத்திரம்
840. நிர்மூலமானவைகளைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
841. பாழானதை பயிர் நிலமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
842. காணாமற்போனதை தேடுகிறவரே ஸ்தோத்திரம்
843. துரத்துண்டதை திரும்பச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
844. நசல் கொண்டதை திடப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
845. எலும்ப முறிந்ததை காயங்கட்டுபவரே ஸ்தோத்திரம்
846. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே ஸ்தோத்திரம்
847. பெரு வெள்ளத்துக்குப் பகலிடமே ஸ்தோத்திரம்
848. வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக இருப்பவரே ஸ்தோத்திரம்
849. விடாய்த்த பூமிக்கு பெருங் கன்மலையின் நிழலாயிருப்பவரே ஸ்தோத்திரம்
850. குருடரின் கண்களைத் திறக்கிறவரே ஸ்தோத்திரம்
851. சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
852. சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
853. தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்
854. வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஊற்றுகிறவரே ஸ்தோத்திரம்
855. எல்லார் மேலும் தயையுள்ளவரே ஸ்தோத்திரம்
856. எல்லா ஜீவன்களுக்கும் ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
857. விதைக்கிறவனுக்கு விதையையும் பசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அளிக்கிறவரே ஸ்தோத்திரம்
858. பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
859. தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
860. தமக்குப் பயந்தவர்களுடைய மனவிருப்பத்தின் படி செய்கிறவரே ஸ்தோத்திரம்
861. தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறவரே ஸ்தோத்திரம்
862. தம்மில் அன்பகூருகிறயாவரையும் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
863. கபடற்றவர்களை காக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
864. உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
865. தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரே ஸ்தோத்திரம்
866. தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவரே ஸ்தோத்திரம்
867. வெண்கலக் கதவுகளை உடைப்பவரே ஸ்தோத்திரம்
868. இருப்பத் தாழ்ப்பாள்களை முறிப்பவரே ஸ்தோத்திரம்
869. அந்தகாரத்தில் உள்ள பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் உள்ள பதையல்களையும் கொடுப்பவரே ஸ்தோத்திரம்
870. துரத்துண்ட இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பவரே ஸ்தோத்திரம்
871. பறந்து காக்கிற பட்சி போல் எருசலேமின் மேல் (எங்கள் மேல்) ஆதரவாயிருப்பவரே ஸ்தோத்திரம்
872. பர்வதங்கள் எருசலேமைக் சுற்றியிருக்குமாப் போல என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றி நீர் இருக்கிறதற்காக ஸ்தோத்திரம்
873. எருசலேமைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
874. கர்த்தாவே, நீர் வீட்டை கட்டுகிறவர் ஸ்தோத்திரம்
875. கர்த்தாவே, நீர் நகரத்தைக் காக்கிறவர் ஸ்தோத்திரம்
876. தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்பவது போல எங்கள் சிறையிருப்பைத் திருப்பகிறவரே ஸ்தோத்திரம்
877. துன்மார்க்கனி்ன் கயிறுகளை கர்த்தர் அறுத்தீரே ஸ்தோத்திரம்
878. துன்மார்க்கரின் வழியை கவிழ்த்துப் போடுகிறவரே ஸ்தோத்திரம்
879. துன்மார்க்கரை தரைமட்டும் தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்
880. துன்மார்க்கரை சறுக்கலான இடங்களில் நிறுத்தி பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
881. பாவிகளுக்கு விலகினவரே ஸ்தோத்திரம்
882. தீங்குக்கு மனஸ்தாபப் படுகிறவரே ஸ்தோத்திரம்
883. மன்னிக்க தயை பெருத்தவரே ஸ்தோத்திரம்
884. பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்
885. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்
886. ஒருவனை தாழ்த்தி ஒருவனை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
887. பெருமையுள்ளவனுக்கோ எதிர்த்து நிற்பவரே ஸ்தோத்திரம்
888. தாழ்மையுள்ளவனுக்கோ கிருபை அளிப்பவரே ஸ்தோத்திரம்
889. ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
890. காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
891. ஞானிகளுக்கு ஞானத்தைக் கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்
892. அறிவாளிகளுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம்
893. மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவரே ஸ்தோத்திரம்
894. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
895. உம்மிடத்தில் திரளான மீட்பு உண்டு, ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்
896. மெய்யாகவே ஜனங்களை சிநேகிக்கிறவரே ஸ்தோத்திரம்
897. ஜாதிகளை தண்டிக்கிறவரே ஸ்தோத்திரம்
898. சமுத்திரத்தின் மும்முரத்தையும், அலைகளின் இரைச்சலையும் அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
899. ஜனங்களின் அமளியை அமர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
900. ஆயிரம் தலைமுறைக்கும் கிருபை செய்கிறவரே ஸ்தோத்திரம்