வேலை நிறைய இருக்கு வேலைக்கு வாங்க…
லூக்கா 10:1-12
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இயேசு காண விரும்பிய இறையாட்சி இன்னும் நிறைவேறவில்லை. அதற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. அந்த வேலையைச் செய்வதற்கு வாங்க என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
இறையாட்சியைக் கொண்டு வருவது என்பது இயேசுவின் இன்பக்கனவு. அந்த கனவை நிறைவேற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அநத கனவை இரண்டு விதங்களில் நாம் நிறைவேற்றலாம்.
1. தினமும் தேடல்
இறையாட்சிப் பணிக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்ற தனிப்பட்ட தேடல் என்பது ஒவ்வொருக்கும் இருக்க வேண்டும். அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இருக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சாதனை சாத்தியம்.
2. தினமும் தேவை
எப்படி உணவு உடலுக்கு அவசியமான தேவையோ அதைப்போல இறையரசுக்காக தினமும் உழைப்பது நம் தேவை. தினமும் நாம் இறையரசுக்காக உழைக்க வேண்டும். நிறைய வேலைகள் இருக்கின்றன. ஓய்வில்லா உழைப்பு உயர்வைத் தரும்.
மனதில் கேட்க…
1. இறையரசுக்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது. நான் செய்ய வேண்டுமல்லவா?
2. தினமும் இறையரசுக்காக உழைக்க வேண்டும் என்பது என் தலையாய கடமைதானே?
மனதில் பதிக்க…
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் – (லூக்கா 10:2)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா