விருதுவாக்கு விறுவிறுப்பாக்கும்
லூக்கா 4:16-30
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
வாழ்க்கையில் வாலிப பருவத்தை அடைந்ததும் நாம் பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறோம். நம்முடைய திட்டம் என்ன? குறிக்கோள் எப்படிப்பட்டடது? பணியின் விருதுவாக்கு என்ன? இதுபோன்ற தெளிவுகள் இருந்தால் அவைகள் நம்மை சுறுசுறுப்பாக மாற்றும். நம் பணிகளை விறுவிறுப்பாக்கும். இயேசுவின் தெளிவான விருதுவாக்கோடு தெளிவாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
இயேசுவின் விருதுவாக்கு:
ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் ஏனெனில் விண்ணரசு உங்களுக்கு உரியது என்ற நற்செய்தியை ஏழைகளுக்கு அறிவிக்கும் விருதுவாக்கு, சிறைப்பட்டோரை விடுதலை செய்து மகிழ்ச்சியை அளிக்கும் விருதுவாக்கு, மக்களின் அகக்கண்களை திறந்து பார்வை அளிக்கும் விருதுவாக்கு, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்மிட்டு அறிவிக்கும் விருதுவாக்கு. இந்த திட்டத்தை ஆண்டவர் நிறைவேற்றிய பிறகுதான் தந்தையே எல்லாம் நிறைவேறிற்று என்று சொல்லி மண்ணகத்திலிருந்து பிரிந்து விண்ணகம் சென்றார்.
நமது விருதுவாக்கு:
உங்கள் வாழ்க்கையில் விருதுவாக்கு உண்டா? இல்லையா? அன்புமிக்கவர்களே! விருதுவாக்கு இல்லையெனில் விறுவிறுப்பு இருக்காது. சுவை இருக்காது. வாழ்க்கை தித்திக்காது. கசக்கும். மிகவே கசக்கும். இன்றே எடுப்போம். மீதமிருக்கின்ற நாட்களை சுறுசுறுப்பாகவும், சுவையாகவும் அனுபவிப்போம்.
மனதில் கேட்க…
1. வாழ்க்கையை அழகான விருதுவாக்கோடு இன்று ஆரம்பிக்லாமே?
2. இயேசுவின் விருதுவாக்கிற்காக நானும் உழைக்கலாம் அல்லவா?
மனதில் பதிக்க…
ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது, ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்(லூக் 4:18)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா