வாழ்வின் மகத்துவம்
மண்ணகத்தில் நாம் வாழக்கூடிய வாழ்வு சாதாரணமானது அல்ல. அது ஒரு கடமை. மிகப்பெரிய பொறுப்பு. பெற்றுக்கொண்ட வாழ்விற்கான பயனை நாம் கொடுத்தே ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால், அதற்கான பலனையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கு நமது வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் விழிப்போடு வாழ வேண்டும்.
நமது கடமையில் நாம் தவறுகிறபோது, மற்றவர்களால் நாம் புறக்கணிக்கப்படுகிறோம். மற்றவர்கள் நம்மை அருவருப்பாகப் பார்க்கிறார்கள். நம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள். நம்மை ஏளனத்தோடும் இகழ்ச்சியோடும் நோக்குகிறார்கள். அதே கடமையை நாம் முழு ஈடுபாட்டுடன் செய்கிறபோது, நாம் பாராட்டப்படுகிறோம். அதற்கான முழு வெகுமதியையும் பெற்றுக்கொள்கிறோம். வெகுமதிக்காக இல்லையென்றாலும், நமது கடமையின் பொருட்டாவது நாம் நமது பணியை முழுமையோடு செய்ய வேண்டும்.
வாழ்வை ஏனோ தானோவென்று வாழ்கிறவர்கள் நம்மில் அதிகமாகிவிட்டார்கள். வாழ்வின் உண்மையான பயனை அவர்கள் பொருட்படுத்துவதும் கிடையாது. வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ நாம் முயற்சி எடுப்போம், எல்லாச்சூழ்நிலைகளிலும் வாழ்வை மகத்துவத்தை, மகிமையை உணர்ந்து வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்