வாழ்வின் கடமை
கிடைத்துள்ள பதவி, பணம், சேர்த்துள்ள சொத்து, நீண்ட ஆயுள், அன்புள்ள குடும்பம் இவை எல்லாம் கடவுள் தந்த பொறுப்பு. இவை உண்டு குடித்து, அனுபவித்து, கடைசியில் அனைத்தையும் இழந்து,கைகட்டி நிற்க அல்ல. அருகில் உள்ளோரை ஆண்டு ஆட்டிப்படைக்க அல்ல.மாராக,நாம் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க தெய்வம் தந்த வாய்ப்புக்கள் இவைகள்.ஒவ்வொன்றின் பின்னணியிலும் பெரியதொரு பொறுப்பும் கடமையும் புதைந்திருப்பதை உணர்த்துவதே இப்பகுதி.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பாளர் என்ற முறையில் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்த தலைவருக்கு நம்பிக்கைக்குரியவராயும் அறிவுடையவராகவும் செயல்பட வேண்டும். அதே வேளையில் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட குடும்பத்திற்கு, இறை மக்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு, குடிமக்களுக்கு நாம் பொறுப்புள்ளோராயும் இருப்பது நம்மேல் உள்ள கடமையும் கூட.
நம் அன்றாட வாழ்க்கையில் கடவுள் இப்பொறுப்பை நம் ஒவ்வொருவருக்கும் தந்துள்ளார். அதைச் சிறப்பாகச் செய்தால் வாழ்வில் உயர்வும் பரிசும் பாராட்டும் கிடைக்கும். பொருப்பைப் பொருப்புடன் செய்யவில்லையாயின் தண்டனையும் வாழ்க்கை நிலையில் தாழ்வும் வந்து சேரும்.
“மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும். (லூக் 12’48) இதுவே நம் கடமை. சிறப்பாகச் செய்து சிறப்படைவோம்.
~அருட்திரு ஜோசப் லீயோன்