யோவானிலும் பெரியவர்…
“மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவைனை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆனால் இறைஅரசில் பங்குபெறும் சிறியவர் யோவானை விடப் பெரியவர்”. திருமுழுக்கு யோவானை உயர்த்திபேசும் ஆண்டவர் அதே வேளையில் கடவுளின் அரசில் செல்லத் தகுதிபெறுபவர் அவரினும் பெரியவர் என்று குறிப்பிடுகிறார். யார் இந்த யோவான்? அவருக்கு நேர்ந்த கதி என்ன? இயேசுவின் வருகைக்காக மக்களை தயார் செய்தவர். கடவுள் அவருக்குக் கொடுத்த பணியைத் திறம்படச் செய்தவர். இறைவாக்கினருக்கு சிறந்த மாதிரியாய் செயல்பட்டவர். ஏரோது அரசன் தன் சகோதரன் மனைவியை வைத்திருத்தலாகாது என்று இடித்துரைத்தவர். அவ்வாறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிரசேதம் செய்யப்பட்டு உண்மைக்கு சாட்சியாக வாழ்து மரித்த இறைவாக்கினர்.
இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்டிய யோவான் உண்மைக்காக கொல்லப்பட்டிருக்கிறார். விசுவாச வாழ்வில் உண்மைக்கு சாட்சியம் பகர்ந்தவர்கள், நேர்மையோடும் நீதியின்படியும் வாழ்ந்தவர்கள், தங்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்த அநேக விசுவாசிகள் இன்னல்கள் பட்டதும் கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக உயிர் துறந்தவர்;களும் ஏராளம். அவர்களில் சிலர் இன்று புனிதர்களாக நம் மத்தியில் அறிவிப்பட்டிருக்கிறார்கள். அறிவிக்கப்டாத புனிதர்கள் ஏராளம்.
உண்மைதான். கிறிஸ்தவ விசுவாச வாழ்வு என்பது மிகக் கடினமாக ஒன்று. இன்றய பொருள் நாட்டமிக்க (Materialistic) உலகில் கிறிஸ்துவின் மதிப்பிடுகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் பெரும் இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் உள்ளாக்கப்படுவது தவிற்கமுடியாத ஒன்று. கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் பற்றுடனும், உறுதியுடனும் வாழ, இயேசுவின் மதிப்பீடுகளை பின்பற்றி நடக்க ஆண்டவரிடம் அருள்வேண்டி பயணத்தை தொடர்வோம். துன்பங்களின் மத்தியில் வெற்றிவாகை நமதே!
— பணி மரியதாஸ்
(கடந்த ஞாயிறு மறையுரையின் சுருக்கம்