மாற்றத்ததை ரசித்து ருசித்து பார்க்கலாமே!
ஆண்டவரின் தோற்றமாற்ற விழா
மாற்கு 9:2-10
இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற விழாவினைக் கொண்டாடுகின்றோம். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. தம் சீடர்களில் மிகவும் நெருக்கமான மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு மலையேறும் இயேசு அங்கே செபிக்கிறார். செபிக்கும்போதே அவரது தோற்றம் மாறுகிறது. அவரது மனித சாயல் மறைந்து, இறைச் சாயல் வெளிப்படுகிறது. அவரது ஆடை வெண்ணிறத்தில் ஜொலிக்கிறது. விண்ணகக் காட்சியாக அது மாறுகிறது. பழைய ஏற்பாட்டின் இரு பெரும் தூண்களான மோசேயும், எலியாவும் தோன்றி அவருடன் உரையாடுகிறார்கள். ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்கிறது. “இவரே என் மைந்தர்” என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலிக்கிறது. இதுதான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு.
பழைய வாழ்க்கையில் படுத்து சுகம் கண்டுக்கொண்டிருக்கிற நாம் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்பதே நமக்கான உருமாற்றம் ஆகும்.
நம் வாழ்வில் ஏற்படும் மாற்றம் பல நிலைகளில் நமக்கு மட்டுமல்ல நம்மை சூழ்ந்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
1. முதலில் கடவுள் மகிழ்ச்சியடைகிறார்
2. நம் குடும்பம் மகிழ்ச்சியடைகிறது
3. இயற்கை மகிழ்ச்சியடைகிறது
4. புனிதா்கள், வானதூதர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்
5. நாம் மகிழ்ச்சியடைகிறோம்
மாற்றம் என்பது ஒவ்வொரு நிமிடமும் நடைபெறக் கூடியது. அதை வரவேற்றால் வசந்தம் நமக்கு உண்டு. மாற்றத்தை வெறுத்தால் அது நம்மை பார்த்து வெறுக்கும. இதனால் வாழ்வில் முன்னேற்றமும், உயர்வும் தடைபடும். மாற்றம் மட்டும் தான் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அத்தகைய மாற்றத்ததை ரசித்து ருசித்து பார்க்கலாமே!
மனதில் கேட்க…
• என் வாழ்கையில் கொஞ்சமாவது மாறியிருக்கிறேனா?
• என்னுடைய மாற்றத்தினால் என்னை சூழ்ந்திருப்பவர்களுக்கு மகழ்ச்சி கொடுக்கலாமே?
மனதில் பதிக்க…
என் அனபார்ந்த மைந்தர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் (மாற் 9:7)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா