மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்
இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான வார்த்தைகள் இயேசுவின் பணிவாழ்வின் மையமாகக் கருதப்படுகிறது. மனம்மாற்றம், நற்செய்தி மற்றும் நம்பிக்கை என்பதுதான் அந்த மூன்று வார்த்தைகள். மனம்மாற்றம் என்பது பாவத்தை வெறுப்பது. இதுவரை பாவத்திலே வாழ்ந்தவன், பாவத்தோடு வாழ்ந்தவன், பாவியாக இருந்தவன், இப்போது பாவத்தை வெறுக்கிற நிலைதான் மனமாற்றம்.
இயேசுவின் இரண்டாம் செய்தி நற்செய்தி. இயேசு நற்செய்தி அறிவிப்பதற்காக வந்திருக்கிறார். அது என்ன நற்செய்தி? நம்பிக்கை தரும் நற்செய்தி. முற்காலத்தில், வாழ்வே நம்பிக்கையின்மையினால் நிறைந்திருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சிந்திக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இயேசுவின் மண்ணக வாழ்வு நம்பிக்கை தரும் நற்செய்தியாக இருக்கிறது. அவரது போதனைகளும், அவர் செய்த புதுமைகளும் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு, புதிய ஒளியைத்தருவதாக இருக்கிறது.
இயேசு தரும் மூன்றாவது செய்தி நம்பிக்கை. நம்பிக்கை எதை வெளிப்படுத்துகிறது? நம்பிக்கை கடவுளின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, பராமரிப்பை உணர்த்துகிறது. கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கிறார் என்பதையும், அவரிடத்திலே நாம் நம்பிக்கை வைக்கிறபோது, நாம் மகிழ்வோடு இந்த உலக வாழ்வை வாழலாம் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்