மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…
லூக்கா 5:33-39
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத ஒருசிலர் எதையாவது, அவசியமில்லாததைச் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை தடைசெய்ய அதிக ஆசைப்படுவர். அவர்களைக் காணும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லித் தருகிறது.
1. கண்டுக்கவே வேண்டாம்
கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பேசக் கூடாது. அதை பெரிதாக எண்ணக் கூடாது. பெரிதாக எண்ணினால் அவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். நம் மகிழ்ச்சி பறிபோகும். இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள் பேசும்போது கையாண்ட பாணியை நாம் கையாள வேண்டும்.
2. கறைப்படுத்தவே வேண்டாம்
நம் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்க வேண்டும். அவர்களைத் தொடுவது சாக்கடையைத் தொடுவதற்கு சமம். ஆகவே எந்த சண்டையும் அவர்களிடத்தில் இட வேண்டாம். அவர்களுடைய பண்புகளை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல நாம் நடக்க நம்மை பழகிக்கொள்ள வேண்டும்.
மனதில் கேட்க…
1. மகிழ்ச்சியாக இருக்க நான் அனுதினமும் முயற்சி எடுக்கிறேனா?
2. என் மகிழ்ச்சியை விரும்பாத நபரை பார்க்கும் மனிதரிடத்தில் நான் எப்படி நடந்துக்கொள்கிறேன்?
மனதில் பதிக்க…
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது(மத் 16:22)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா