போரிட்டால் தான் இறையாட்சி இயங்கும்
லூக்கா 17:20-25
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நம் நடுவே இருக்கிற இறையாட்சியை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு நாம் போரிட வேண்டும். இறைவனை மட்டுமே நினைத்தவாறு போரிட்டு அலகையின் ஆசைகளின் மீது வெற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு விதத்திலே போரிட்டு இறையாட்சியை அமல்படுத்த அவரசமாய் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது.
1. அமைதிப்போர்
நம் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் தீமைகளை விரட்டுவதற்கு போராட வேண்டும். இந்த போரும் கடினமான போர் தான். இதை தினமும் தியானித்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெளனமாக வெற்றிக்கொள்ள வேண்டும். மெளனமாக தியானித்து நம்மை வெற்றிக்கொள்வதால் இது மெளனப்போர் என அழைக்கப்படுகிறது.
2. அரட்டும் போர்
நம் வாழுமிடங்களில் மனிதர்கள் அரக்கத்தன்மையுடன் நடக்கும்போது அதை எதிர்த்து செயல்பட நாம் தொடுக்கும் போரே அரட்டும் போர். நம் செயல்பாடு அந்த அரக்கர்களை அரட்டும் வண்ணம், அவர்கள் செயல்களை அச்சுறுத்தும் வண்ணம் அமைய வேண்டும். இந்த போரை நாம் தொடுக்கும்போது இறையாட்சி இயக்கத்தில் இருப்பதை நாம் எளிதாக கண்டறியலாம்.
மனதில் கேட்க…
1. இறையாட்சி இயங்குவதற்கு போரிட வேண்டும் நான் தயாரா?
2. அமைதிப்போர், அரட்டும் போரில் நான் கலந்துக்கொள்வேனா?
மனதில் பதிக்க…
இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது (லூக் 17:21)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா