பொறுப்புக்களில் பெருமகிழ்ச்சியடைவோம்!
லூக்கா 19:11-28
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
எல்லோருக்கும் கடவுள் பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை பெருமகிழ்வோடு கொண்டாடாடுபவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதிப்பர். அந்த பொறுப்பை வோண்டா வெறுப்போடு பார்ப்பவர்கள் நிமிர்ந்து நிற்க முடியாமல் சரிந்து போவார்கள். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமகிழ்ச்சியோடு செய்து வாழ்க்கையை கொணடாடுவோம் வாருங்கள் என இனிய வரவேற்பு வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பொறுப்பை வெறுப்போடு பார்க்காமல் மகிழ்வோடு பார்க்க வேண்டுமென்றால் இரண்டு செயல்கள் செய்வது மிகவும் சிறந்தது.
1. சிறப்பாக்குவேன்
என்னிடம் கொடுக்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் சரி நான் அதை மிகவும் சிறப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருத்தல் வேண்டும். நேற்று செய்தததை விட இன்று இன்னும் சிறப்பாக செய்வேன் என்ற அணையாத ஆசை அனைத்தையும் அற்புதமாக்கும். இது நாளும் பொளுதும் எரிந்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி எரிந்தால் நாம் கண்டிப்பாக நம் பொறுப்பை பெருமகிழ்ச்சியாக பார்க்க முடியும்.
2. சிறப்புறுவேன்
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை சிறப்பாக செய்து நாம் சிறப்புமிக்கவர்கள் என்ற தரச் சான்றிதழை பிறரிடமிருந்து பெற வேண்டும். நம்முடைய சிறப்பான பெறுப்புக்களால் நாம் சிறப்புற வேண்டும். நம் பெயர் சிறப்புறும். நாம் செய்யும் பொறுப்பான செயல்களால் நம் புகழ் எப்போதும் குன்றாமல் நிலைத்து நிற்கும். நம் பொறுப்புகளை நாம் சரியாக செய்யும் போது மட்டுமே நாம் சிறப்புற முடியும். சாதனையின் பக்கங்கள் நம்மை அழைக்கிறது.
மனதில் கேட்க…
1. பொறுப்புக்களை கண்டால் நான் மகிழ்பவனா? அல்லது வருந்துபவனா?
2. எனக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கை என்ற பொறுப்பை நான் சிறப்பாக்கியிருக்கிறேனா?
மனதில் பதிக்க…
நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன் (மத் 25:21)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா