பேறுபெற்ற கணவர்
அருமையான ஆனந்தம் நிறைந்த குடும்ப வாழ்வை, ஆட்கள் பலர் குறுக்கிட்டு கெடுத்து குட்டிட் சுவராக்கிவிடுவர். சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் சம்பவங்கள், கலையிழந்த மாளிகையாக்கிவிடும். சில ஆசைகள், கொள்கைகள் வண்ணம் காட்டி கண்ணை மறைத்து, குடும்பத்தை காரிருளில் தடுமாற வைத்துவிடும். ஆண்டவனும் கூட சில நேரங்களில் விழையாடலாம். இது போன்ற நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து, காவல்துறை, கோர்ட், விவாகரத்து என்ற விபரீதங்களில் சிக்கி, பெருமைமிக்க குடும்பங்களும் சிறுமையடைகின்றன.
யோசேப்பு, மரியாவின் குடும்பமும் அதற்கு விதி விலக்கல்ல. இறைவனின் திட்டத்தை புறியாதவரையில் புனிதனின் குடும்பமும் தப்பமுடியாது.மனைவியை விலக்கிவிடலாமா என்று சிந்திக்கிறார் யோசேப்பு. நேர்மையாளர். கடவுள் பக்தர். தன் குழப்பத்திற்குத் தீர்வு காண இறை உதவியைத் தேடுகிறார். அமைதியில், தூக்கத்தில், தியானத்தில் இறை உதவி, வெளிப்பாடு, தெளிவு அவருக்கு கிடைக்கிறது. இறை திட்டத்தை தெறிந்து கொள்கிறார். சமுதாயத்தில் தன் பங்கினை உணர்கிறார். தன் குடும்பச் சுமை இப்பொழுது சுவையாகத் தோன்றுகிறது.
குடும்பச் சுமைகள் நம்மை அழுத்தும் வேளைகளில் குடும்பங்களின் பாதுகாவலராம் புனித யோசேப்பின் துணை வேண்டுவோம். இறைவன் தன் தொண்டர்களை அனுப்பி உதவுவார். வாழ்க்கைப் பயணத்தில் குடும்பம் இப்பொழுது பல மடங்காக மகிழ்ச்சியை, நிறைவைத் தரும்.
~ அருட்திரு ஜோசப் லியோன்