புறணி பேசுபவர்கள் தீவிரவாதிகளே!
மத்தேயு 11:16-19
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய ஒரு உரையில் புரணி பேசுபவர்கள் தீவரவாதிகள் என்கிறார். ஏனெனில் அவர்கள் அடுத்தவர்கள் மீது வெடிக்குண்டுகளை வீசிவிட்டு அமைதியான முறையில் கலைந்துச் செல்கிறார்கள். ஆகவே அவர்களைக் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என்றும் திருத்தந்தை அவா்கள் கூறுகிறார்கள். நற்செய்தி வாசகமும் அதே கருத்தைதான் நம் முன்னே வைக்கிறது. ஒருவர் நமக்கு எதிராக புரணி பேசும்போது நாம் அதை எப்படி அணுகுவது என்று நமக்கு சொல்லி தருவதோடு அதற்கான இரண்டு வழிகளை கற்பிக்கிறது.
1. வேண்டு
“தந்தையே! இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று இயேசு ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்க வேண்டும். பகையை அந்த நபரோடு வளர்ப்பது தவறு. மாறாக அமைதியை அந்த இடத்தில் விதைப்பது நல்லது. இந்த ஜெபம் கண்டிப்பாக நம்மை அமைதியாக்கும். இயேசுவை நினைத்து நம்மை அதில் பொருத்தி பொறுமையோடு இருந்தால் நாம் பெறும் நன்மைகள் பன்மடங்கு.
2. நாடு
இப்படி நம்மைப் பற்றி புரணி பேசும்போது நம் ஆன்மீக்தந்தையை நாட வேண்டும். அவரிடம் அனைத்தையும் கொட்ட வேண்டும். மனது எப்படி எல்லாம் வலிக்கிறது என்பதை சொல்லி மனதை சுதந்திரமாக மாற்ற வேண்டும். அவர் வழங்கும் ஆன்மீக நிவாரணத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வழியாக புரணி பேசுபவர்கள் தொடா்ந்து நம் வாழ்வில் வரும்போது அதை எளிதாக சந்திப்பதற்கான பலத்தையும், பாதையையும் தெளிவாக பெற வேண்டும்.
மனதில் கேட்க…
1. நான் பேசும் புரணிகள் நல்லது இல்லை – பின் ஏன் அதை தொடர்கிறேன்?
2. என்னைப் பற்றி பிறர் புரணி பேசும்போது எப்படி அதை அணுக வேண்டும் எனக்கு தெரிகிறதா?
மனதில் பதிக்க…
எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்(1தெச 5:15)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா