பாவத்திற்கு பரிகாரம்: ஆசையும், பேராசையும்
லூக்கா 7:36-50
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மனிதா்கள் நாம் மிகவும் பலவீனமானவர்கள். குறைகள், கறைகள் கொண்டவர்கள். பாவிகளாகிய நாம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் போது நிறைவை நோக்கி புனிதத்தை நோக்கி வளர்கிறோம் என்பதை இன்றைய நற்செய்தி கற்றுத்தருகிறது. பாவத்திற்கு இரண்டு விதங்களில் நாம் பரிகாரம் செய்ய முடியும்.
1. ஆசை ஆசை
நான் பாவி தான் இருந்தாலும் நான் மாறுவேன் என்ற அதிகப்படியான ஆசை ஆளையே மாற்றுகிறது. அந்த ஆசை வளர வளர அது நம்மை புனிதத்திற்குள் கடத்திச் செல்லுகிறது. புனிதர்கள் அனைவரும் இந்த ஆசையைத் தான் கொண்டிருந்தார்கள். நற்செய்தியில் வரும் பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கழுவி பாவத்திலிருந்து வெளியே வருவதற்கான தன் ஆசையை வெளியிடுகிறார். ஆண்டவரும் ஆசீர்வதிக்கிறார். நாமும் நம் ஆசையை வெளியிடலாமா!
2. பேராசை பேராசை
பேராசை என்பது எனன? .மிகவும் விழிப்போடு இருப்பதற்கான பேராசை. பழைய ஏற்பாடு யோசேப்பு பாவம் செய்யக் கூடாது என்பதில் பேராசை கொண்டவராக இருந்தார். கடவுளின் நன்மதிப்பை பெற்றார்.
என்னுடைய பேராசை என்பது என்னுடைய தவறை திரும்ப செய்யாமல் இருப்பதற்கான பேராசை. தவறிவிட்டேன், தடுமாறிவிட்டேன். பரிகாரம் செய்த பின் செய்யமாட்டேன். அதுதான் என் பேராசை என கவனமாய் வாழ்வது. இது நம்மை இமயமலையின் உயரத்திற்கே கொண்டு செல்லும்.
மனதில் கேட்க…
1. நான் பாவத்திலிருந்து மாற வேண்டும் என்ற ஆசை உள்ளதா? எடுத்த முயற்சிகள் என்னென்ன?
2. நான் புனிதராக மாற வேண்டும் என்று யோசித்தது உண்டா? அவசியம் தானே?
மனதில் பதிக்க…
உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன (லூக் 7:48)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா