பணி செய்து நிறைவடைவோம்
நாம் மன நிறைவோடு வாழ இன்று இயேசு சொல்லும் செய்தி சிறப்பான ஒன்று. “நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்”(லூக்17’10) என்ற மனநிலை நமக்கு எப்பொழுதும் வேண்டும்.
இன்று வாழ்க்கை நிம்மதியற்றுப் போவதற்குக் காரணம் வீணான எதிர்பார்ப்பு,அதனால் அதைத் தொடர்ந்து வரும் ஏமாற்றம், அதன் தொடர்ச்சியான விரக்தி, அதன் விளைவு உடல்நோய், மன நோய். நான் பணியாளன், தொண்டன் என்ற உணர்வு மேN;லாங்கிவிடுகிறபோது இவை அனைத்துக்கும் இடமே இல்லை. எனவே வாழ்வில் நிறைவும் நிம்மதியும் இருக்கும்.
நாம் இறைவனின் பணியாட்கள் என்ற எண்ணம் முன்னிலையில் இருந்தால், குடும்பத்தில் மனைவி மக்களுக்கு அன்புடன் பணிசெய்வதை பெருமையென கொள்வோம். அலுவலகத்தில் உள்ளோரைச் சகோதர சகோதரியாகக் காண்போம்.அண்டை அயலாரை அன்பர்களாகக் கருதுவோம். ஆண்டவனும் பாராட்டுவான். அனைவரும் வாழ்த்துவர். மனதில் மகிழ்ச்சி நிறையும்.
நான் ஒரு பணியாள், என் கடமையை நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்குள் இருந்தால் நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
~அருட்திரு ஜோசப் லியோன்