நல்ல சமாரியன் சாத்தியமா?
லூக்கா 10:25-37
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஆண்டவர் இயேசு எல்லாரையும் நல்ல சமாரியனாக மாற அழைக்கிறார். ஆனால் அனைவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை. இன்றைய நற்செய்தியில் வருகின்ற உவமையில் மூன்று நபர்கள் வருகின்றார்கள். ஆனால் அதில் ஒருவர் மட்டுமே நல்ல சமாரியனாக செயல்படுகிறார். ஒருவர் மாறும் போதே இயேசுவுக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் பலர் மாறும்போது எப்படி இருக்கும். மாறலாமா? மாறுவோம் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நல்ல சமாரியனாக மாற இரண்டு முயற்சிகள் முக்கியம்.
1. உடனிருத்தல்
நவீன காலத்தில் உடனிருத்தல் என்பது குறைந்து வருகிறது. இந்த சூழலில் நாம் இந்த முயற்சியை எடுக்க வேண்டும். முதலில் நம் இல்லத்தில் இருப்பவர்களின் இன்ப துன்பங்களில் உடனிருக்க வேண்டும். அடுத்து அருகிலிருப்பவர்களின் உடனிருக்க வேண்டும். இதுதான் நல்ல சமாரியன் நிலைக்கு நம்மை உயர்த்தும் முதல் படி.
2. உபசரித்தல்
உபசரித்தல் என்பது உயரிய பண்பு. நம் விருந்தோம்பல் பண்பு. உபசரிக்கும் போது நாம அன்பை கடத்துகிறோம். நம் உற்சாகம் அடுத்தவருக்கு கிடைக்கிறது. நம் உபசரித்தல் அடுத்தவரை உயரே கொண்டு செல்லும் எரிபொருளாக மாறி சக்தி அளிக்கிறது. இதுதான் நல்ல சமாரியன் நிலைக்கு நம்மை உயர்த்தும் இரண்டாவது படி.
மனதில் கேட்க…
3. என்னைப் பற்றி நல்ல சமாரியன் என பிறர் சொல்ல கேட்டிருக்கிறேனா?
4. உடனிருப்பு, உபசரிப்பு இந்த இரண்டும் அருமைதானே?
மனதில் பதிக்க…
நீரும் போய் அப்படியே செய்யும் (லூக் 10:37)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா