நம்முடைய பாவங்களை மன்னித்து நலன் அளிப்பார். 2 குறிப்பேடு 7:14

எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று,தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன். அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன் என்று நம்முடைய ஆண்டவர் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார்.2 குறிப்பேடு 7 : 14.

நாம் நமது பாவங்களை அறிக்கை செய்து மறுபடியும் அதை செய்யாதபடிக்கு விட்டுவிட்டால் ஆண்டவரும் நமக்கு மன்னித்து அவற்றை கடலின் ஆழத்தில் போட்டுவிட்டு நம்மை எல்லா ஆபத்துக்கும் விலக்கி காத்து நம்மேல் அன்புக்கூர்ந்து உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டால் நாமும் ஆண்டவரைப்போல் மறுரூபமாக்கப்படுவோம். எழு!ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. ஏசாயா 60:1ல் வாசிப்பதுபோல ஆண்டவர் அவரின் முகத்தை நம்மேல் உதிக்கப்பண்ணுவார். இதோ!இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக்கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்.

அன்பானவர்களே! நாமும் ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து ஆண்டவரின் சமூகத்தை நித்தமும் தேடினால் அந்தந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை தந்து நம்மை ஆசீர்வதித்து தமது இறக்கைகளின் மறைவில் பாதுகாத்து நாம் விரும்புவதற்கும்,வேண்டிக்கொள்வதற்கும், அதிகமாய் செய்து நாம் அறியாமல், தெரியாமல் செய்யும் பாவங்களையும் மன்னித்து நித்தமும் வழிநடத்தி செல்வார். நம்முடைய ஜெபங்கள் அனுதினமும் கேட்கப்பட்டு அவரின் செல்லப்பிள்ளைகளாய் நாமும் வலம்வரலாம்.

ஜெபம்

நேர்மையை மார்பு கவசமாக அணிந்துக்கொன்டவரே : அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக்கொண்டவரே! உம்மை துதிக்கிறோம். எங்களுக்காக சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு உமது உயிரை கொடுத்து மீட்டவரே! எங்கள் பாவங்களையும்,அக்கிரமங்களையும் மன்னிப்பவரே!உம் ஒருவருக்கே துதி, கனம், மகிமையை ஏறேடுக்கிறோம் . உமது முகத்தை எங்கள்மேல் அனுதினமும் பிரகாசிக்கச் செய்து காத்து வழிநடத்தும்.இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில்
வேண்டுகிறோம் எங்கள் பிதாவே!ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.