தேடலின் விடை
(மத்தேயு 28: 6-15)
திகிலுற்றுக் கிடந்த அனைவருக்கும் இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. முடங்கிக் கிடந்தவர்கள் அனைவரும் முடுக்கி விடப்பட்டனர். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைப் பரப்ப ஒருபுறம் சமுதாயத்தால் மதிக்கப்படாத பெண்கள் ஓடுகின்றனர். மறுபுறம் அவர் உயிர்ப்பின் செய்தியை சோற்றுக்குள் மறைக்கப்பட்ட பூசணிக்காயைப் போன்று மறைத்துவிட அதிகார வர்க்கத்தினர் ஆட்களை அனுப்புகின்றார்கள். பலவீனமான பெண்கள் ஒருபுறம், படைக்கவசங்களுடன் பலம் வாய்ந்த படைவீரர்கள் மறுபுறம். உண்மையைக் கையில் எடுத்துக் கொண்டு அன்பினால் இயக்கப்படும் பெண்கள் ஒருபுறம். கையூட்டுக் காசினைப் பெற்றுக் கொண்டு உண்மையினை மூடி மறைக்க எண்ணும் கூட்டம் மறுபுறம்.
அவர்களுக்குத் தெரியவில்லை இருளை விரட்டியடிக்க சிறு தீக்குச்சியே போதுமென்று. உண்மை மலையின் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினைப் போன்றது. விளக்கினைத் தேடும் விண்மினிப் பூச்சிகள் ஒவ்வொன்றும் ஒளியினால் ஈர்க்கப்படும். தேடலின் விடை ஒளியில் மட்டுமே கிடைக்கும். உலகின் ஒளியை நாமும் வேட்கையோடு தேடினால் ஒளியை அடைந்து விடுவோம்.
திருத்தொண்டர் வளன் அரசு
– திருத்தொண்டர் வளன் அரசு